சஜித்பிரேமதாச 2020 இல் ஜனாதிபதியாவது உறுதி

புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 2020 இல் ஜனாதிபதியாவது உறுதி. இதனை எந்தவொரு சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாதென நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்தார்.

நிவித்திகலையில் கடந்த சனிக்கிழமை (26) புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அமைச்சர் இங்கு மேலும் தெரிவித்ததாவது-,

2020 இல் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாவது உறுதியாகி விட்டது. எதிர்வரும் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்குப் புள்ளடியிடும் ஒவ்வொருவருக்கும் இந்நாடு சொந்தமாகும்.இதை மக்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நாட்டில் போதைப்

பொருளையும் பாதாள உலகக் கோஷ்டியையும் ஒழிப்பதாக ராஜபக்ஷ குடும்பத்தினர் சவால் விடுத்துள்ளனர். இந்த நாட்டில் போதைப்பொருள் சர்ச்சை ஏற்படுவதற்கு காரணமானவர்களே அவர்கள்தான்.

வெளிநாட்டு ஜோடியின் கணவரைக் கொலை செய்த பின்னர் மனைவியை வன்புணர்வுக்குட்படுத்திய தங்காலை தலைவர் மற்றும் 100 கன்னிப்பெண்களை வன்புணர்வுக்குட்படுத்திய அக்குரஸ்ஸ தலைவர் என்போரை உருவாக்கியவர்கள் யார்?

நிவித்திகலை என்றதும் மக்கள் முல்லைத்தீவு மாங்குளம் பிரதேசத்துக்குச் செல்வதுபோல் அஞ்சுவர். எமது மக்களுக்கு சுதந்திரமாக அரசியல் நடத்த முடியாததொரு சூழ்நிலை உருவானது. அவர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தனர். இதற்கு முன்னர் எனக்கு மிக நெருங்கிய ஆதரவாளர் ஒருவரை கஹவத்தையில் கொலை செய்தார்கள். இன்று சுதந்திரமாக அரசியல் செய்யும் நிலைமையை நாம் நிவித்திகலையில் உருவாக்கியுள்ளோம்.

 

 

Tue, 10/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை