2019 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும்

2019 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும்-Scholarship Exam Results Will be Published Today

2019 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகள் இன்றையதினம் (06) வெளியிடப்படவுள்ளது.

ஏற்கனவே நேற்றையதினம் இப்பெறுபேறுகள் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்வாரம் வெளியிடுவதற்கான நிலையே காணப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று நண்பகல் அளவில் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்

கடந்த ஓகஸ்ட் 04 ஆம் திகதி 2995 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில், 3 இலட்சத்து 39 ஆயிரத்து  360 மாணவர்கள் (339,360) தோற்றுவதற்கு விண்ணப்பிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sun, 10/06/2019 - 09:48


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக