2019-2020 ஆண்டு சீசனிலிருந்து ஜேஸன் பெரேன்டோர்ப் விலகல்

அவுஸ்திரேலியக் கிரிக்கெட் அணியின் மித வேகப்பந்து வீச்சாளரான ஜேஸன் பெரேன்டோர்ப், 2019-2020 ஆண்டு சீசனில் விளையாட மாட்டார் என கிரிக்கெட் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. 29 வயதான இடக்கை மித வேகப்பந்து வீச்சாளரான ஜேஸன் பெரேன்டோர்ப், முதுகெலும்பு அறுவை சிகிச்சை செய்யவுள்ளதால், இந்த முடிவினை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியா அணிக்கெதிரான ரி-20 போட்டியில் அறிமுகமாக சர்வதேச கிரிக்கெட் அறிமுகத்தை பெற்றுக்கொண்ட ஜேஸன் பெரேன்டோர்ப், கடந்த ஜனவரி மாதம் இந்தியா அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.

இதன்பிறகு தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்த அவர், இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கிண்ண தொடரில் பங்கேற்றார்.

அவர், நடைபெற்று முடிந்த உலகக்கிண்ண தொடரில், சிறந்த பந்துவீச்சு பிரதியினையும் பதிவு செய்தார். அவர் லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில், 44 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பிறகு எவ்வித போட்டிகளிலும் விளையாடாத அவர், தற்போது முதுகெலும்பு அறுவை சிகிச்சையை மேற்கொள்ளவுள்ளார்.

இதற்கு முன்னதாக அவுஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பெட்டின்சன் மற்றும் நியூஸிலாந்தின் மெட் ஹென்ரி ஆகியோர் இந்த அறுவை சிகிச்சையினை செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Thu, 10/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை