பெற்றோலியக் கூட்டுத்தாபனம்; 2018 இல் ரூ10,502 கோடி நஷ்டம்

கோப் குழு  தெரிவிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 2018ஆம் ஆண்டு 10,502 கோடி ரூபா நஷ்டம் அடைந்திருப்பதாக அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை 50 கோடி ரூபா நஷ்டம் அடைந்திருப்பதுடன், வரையறுக்கப்பட்ட எல்கடுவ கம்பனி 3 கோடி ரூபா நஷ்டம் அடைந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக 2018ஆம் ஆண்டு பாளி மற்றும் பௌத்த பல்கலைக்கழகம் 2,187,367 ரூபாவும், மரபுரிமைகள் தொடர்பான மேற்படிப்புக்கான நிறுவனம் 3,567,328 ரூபாவும் நஷ்டம் அடைந்துள்ளன.

 

அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள இலங்கை மகாவலி அதிகாரசபை மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை ஆகியன தமது வருடாந்த அறிக்கைகளை குழுவுக்கு சமர்ப்பித்திருக்கவில்லை.

லங்கா ஹொஸ்பிட்டல் கோப்ரேஷன் பி.எல்.சி, இலங்கை அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, அரசாங்க பொறியியலாளர் கூட்டுத்தாபனம், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபை, இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம், வரையறுக்கப்பட்ட இலங்கை மின்சார (தனியார்) நிறுவனம் உள்ளிட்ட 23 நிறுவனங்கள் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் சமர்ப்பித்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு கோப் குழு நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

 

Thu, 10/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை