சாஹிரா கல்லூரியின் 2016 குழு ஹொக்கி போட்டிகள்

கொழும்பு சாஹிரா கல்லூரி 2016 ஆம் ஆண்டு பழைய மாணவர் குழு ஏற்பாடு செய்த ஹொக்கி போட்டி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 12 மற்றும் 16 வயதுக்கும் உட்பட்ட அணிகள் பங்கேற்றன.

12 வயதிற்கு உட்பட்ட பச்சை, பழுப்பு, வெள்ளை மற்றும் கறுப்பு அணிகள் போட்டிகளில் பங்கேற்றன. வெள்ளை அணி கறுப்பு அணியை ஷூட் அவுட் முறையில் இறுதிப் போட்டியில் தோற்கடித்தது.

16 வயதுக்கு உட்பட்ட இறுதிப் போட்டியில் டைட்டியன்ஸ் அணி ஹரிகேன்ஸ் அணியை தோற்கடித்தது. ஹரிகேன்ஸ் அணியைச் சேர்ந்த அல் ஹம்தி சிறந்த கோல் காப்பாளராகவும், டைட்டான்ஸைச் சேர்ந்த மொஹமட் ஹசீப் சிறந்த வீரராகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

ருஸைய்க் பாரூக்

Mon, 10/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை