20 ஆண்டுகளின் பின்னர் பதில் சொலிசிட்டர் ஜெனரலாக தமிழர் நியமனம்

சட்ட மாஅதிபர் திணைக்கள பதில் சொலிசிட்டர் ஜெனரலாக 20 ஆண்டுகளின் பின்னர் தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.

இதன்படி உடன் அமுலுக்கு வரும் வகையில் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக சஞ்சய் ராஜரத்னம் நியமிக்கப்பட்டார். அரச சேவை ஆணைக்குழு இவரை நியமித்தது. சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றிய தில்ருக்‌ஷி டயஸ்

இடைநிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டார்.

எவன் கார்ட் ஆயுத களஞ்சிய வழக்கு தொடர்பில் பிரதிவாதிகளில் ஒருவரான எவன் கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியுடன் தில்ருக்‌ஷி டயஸ் தொலைபேசியில் உரையாடிய ஒலிப்பதிவு சமூக வலைத்தளங்களில் வெளியாகியது.

இதனையடுத்து கடந்த செப்டம்பர் 24 ஆம் திகதி பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார்.

அவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பணிப்பாளர் நாயகமாக இருந்து எவன் கார்ட் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்திருந்ததோடு வழக்கில் இருந்த குறைபாடுகள் காரணமாக வழக்கு நிராகரிக்கப்பட்ட நிலையிலே தொலைபேசி உரையாடல் வெளியானது.

Thu, 10/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை