2ஆம் உலகப் போர் விமானம் விழுந்து ஏழு பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கனக்டிகட் மாநில விமானநிலையம் ஒன்றில் இரண்டாம் உலகப் போர் காலத்து விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.

பதின்மூன்று பேருடன் இந்த போயிங் பி–17 விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்து விமானநிலைய பராமரிப்பு கட்டடத்தில் மோதியுள்ளது. மோதிய விரைவில் விமானம் தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்த விமானம், இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி படையினருக்கு எதிராக குண்டுகளை வீசும் பணியில் பயன்படுத்தப்பட்டதோடு 1987ஆம் ஆண்டு பிட்ஸ்பர்க் நகரில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் விபத்தில் சிக்கியதில் பலர் காயமடைந்தனர். அதன்பின் சரி செய்யப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இந்த விமானம் பொதுப் போக்குவரத்திற்காக பதிவு செய்யப்பட்டிருந்ததாக அமெரிக்க விமானப்போக்குவரத்து அதிகாரசபையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான 10 பி–17 விமானங்கள் மாத்திரமே அமெரிக்காவெங்கு தற்போதும் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

Fri, 10/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை