1st T20: SLvAUS; இலங்கை அணிக்கு 234 ஓட்ட வெற்றி இலக்கு

1st T20: SLvAUS; இலங்கை அணிக்கு 234 ஓட்ட வெற்றி இலக்கு-1st T20-SLvAUS-SL Won the Toss-AUS Bat-Adelaide

12 மாதங்களின் பின் களமிறங்கிய வோனர் சதம் கடந்தார்

சுற்றுலா இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ரி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 233 ஓட்டங்களை பெற்றுள்ளது.

1st T20: SLvAUS; இலங்கை அணிக்கு 234 ஓட்ட வெற்றி இலக்கு-1st T20-SLvAUS-SL Won the Toss-AUS Bat-Adelaide

அவுஸ்திரேலியாவின் அடிலைட்டில் இடம்பெறும் இப்போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 233 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அவுஸ்திரேலிய சார்பில் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அணியின் தலைவர் ஆரோன் பிஞ்ச் மற்றும் டேவிட் வோனர் ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை வழங்கினர்.

1st T20: SLvAUS; இலங்கை அணிக்கு 234 ஓட்ட வெற்றி இலக்கு-1st T20-SLvAUS-SL Won the Toss-AUS Bat-Adelaide

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆரோன் பிஞ்ச் 36 பந்துகளில் 64 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தபோதிலும், பந்தை சேதப்படுத்திய சர்ச்சை தொடர்பில் 12 மாத போட்டித் தடையின் பின் சர்வதேச ரி20 போட்டியில் விளையாடும் டேவிட் வோனர் இறுதி வரை களத்தில் நின்று ஆட்டமிழக்காது 56 பந்துகளில் 100 ஓட்டத்தை பெற்றுக் கொடுத்தார்.

அதிரடியாக ஆடிய க்ளன் மெக்ஸ்வெல் 28 பந்துகளில் 62 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில், லக்ஷான் சந்தகன், தசுன் ஷானக ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை பெற்றுக் கொடுத்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சை சிறப்பாக கையாண்ட அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட் இழப்பிற்கு, 233 ஓட்டங்களை பெற்றது.

அண்மையில் பாகிஸ்தானில் இடம்பெற்ற தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் இலங்கை கிரிக்கெட் அணியின் திறமையை அடுத்து, இலங்கை அணியின் தெரிவாளர்களுக்கு அணிக்காக யாரை தெரிவது என்பதில் சிக்கல் நிலையை எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி
லசித் மாலிங்க (தலைவர்), தனுஷ்க குணதிலக, குசல் மெண்டிஸ், பானுக ராஜபக்ஷ, குசல் பெரேரா (வி.கா.), ஓஷத பெனாண்டோ, தசுன் ஷானக, வணிந்து ஹசரங்க, லக்‌ஷான் சந்தகன், நுவன் பிரதீப், கசுன் ராஜிதா

அவுஸ்திரேலிய அணி
ஆரோன் பிஞ்ச் (தலைவர்), டேவிட் வோனர், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மெக்ஸ்வெல், அஷ்டன் டேர்னர், அலெக்ஸ் கெரி (வி.கா.), அஷ்டன் அகார், பெட்ரிக் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், அடம் ஷாம்பா

அவுஸ்திரேலியா 233/2 (20.0)
டேவிட் வோனர் 100 (56)
ஆரோன் பிஞ்ச் 64 (36)
க்ளன் மெக்ஸ்வெல் 62 (28)

தசுன் ஷானக 1/10 (1.0)
லக்ஷான் சந்தகன் 1/41 (4.0)
நுவன் பிரதீப் 0/28 (4.0)
லசித் மாலிங்க 0/37 (4.0)

Sun, 10/27/2019 - 10:41


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை