“குழந்தை தொழிற்சாலை”யில் இருந்து 19 பெண்கள் விடுதலை

நைஜீரியாவின் மிகப்பெரிய நகரான லாகோசில் கர்ப்பமுறச் செய்து குழந்தைகளை விற்பதற்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 19 பெண்கள் மற்றும் சிறுமிகளை பொலிஸார் விடுத்துள்ளனர்.

வேலை தருவதாக வாக்குறுதி அளித்து நைஜீரியா எங்கும் இருந்து அழைத்து வரப்பட்ட 15 தொடக்கம் 28 வயது கொண்ட பெண்கள் மற்றும் சிறுமிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது நான்கு குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளன.

“குழந்தை தொழிற்சாலை” என்று அழைக்கப்படும் இவ்வாறான முகாம்கள் கிழக்கு நைஜீரியாவில் பொதுவான ஒன்றாக மாறியுள்ளது.

“இளம் பெண்கள் கர்ப்பமுறச் செய்யும் இலக்குடன் கடத்தி வரப்பட்டு அவர்கள் பெற்றெடுக்கும் குழந்தைகள் விற்கப்படுகின்றன. லாகோசில் வீடுகளில் வேலை தருவதாக கூறியே இந்த பெண்கள் அழைத்து வரப்படுகின்றனர்” என்று லாகொஸ் நகர பொலிஸ் பேச்சாளர் பாலா எல்கானா குறிப்பிட்டுள்ளார்.

“ஆண் குழந்தைகள் 1,630 டொலருக்கும் பெண் குழந்தைகள் 980 டொலருக்கும் விற்கப்படுகின்றன” என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து 40 மற்றும் 54 வயது கொண்ட பெண்களை பொலிஸார் கைது செய்திருப்பதோடு மூன்றாவது நபரை தேடி வருகின்றனர்.

Wed, 10/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை