1970களில் செவ்வாயில் நுண்ணுயிரி கண்டுபிடிப்பு

-முன்னாள் நாசா ஆராய்ச்சியாளர்

செவ்வாய் கிரகத்தில் நுண்ணுயிரி இருப்பதற்கான சாத்திய கூறுகளை 1970களிலேயே நாசா கண்டுபிடித்ததாக முன்னாள் ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் நாசா வைக்கிங் லேண்டர் என்ற கருவியை அனுப்பியது. அந்த கருவியானது, அதன் முதல் புகைப்படங்களை கடந்த 1976ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் திகதி அனுப்பியது. அதன் தரவுகளை ஆய்வு செய்தபோது நுண்ணுயிரி போல் ஏதோ சுவாசிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அவை நுண்ணியிரி அல்ல என கூறி நாசா ஆராய்ச்சியாளர்கள் அதனை நிராகரித்தனர்.

இந்நிலையில் இது குறித்து கட்டுரை ஒன்றை வெளியிட்ட முன்னாள் ஆராய்ச்சியாளரும் வைக்கிங் லேண்டரின் முக்கிய கருவியை உருவாக்கியவருமான கில்பெர்ட் வி லெவின், செவ்வாய் கிரகத்தில் நுண்ணுயிரி இருப்பதற்கான சாத்திய கூறுகளை 1970களிலேயே நாசா கண்டுபிடித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவற்றை உரிய ஆதாரத்துடன் நிரூபிக்க முடியவில்லை எனவும் லெவின் வேதனை தெரிவித்திருந்தார்.

Fri, 10/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை