பெண்ணின் வயிற்றினுள் 19.5 கிலோ கட்டி

வைத்தியசாலையில்  சத்திர சிகிச்சை மூலம் அகற்றிச் சாதனை

பெண் ஒருவரின் வயிற்றிலிருந்த 19.5 கி.கிராம் நிறையுள்ள கட்டியொன்றை வெட்டி அகற்றிய சாதனையை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை சத்திர சிகிச்சை நிபுணர்கள் நிகழ்த்தியுள்ளதாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஐ.எம். ஜவாஹிர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (05) முதன் முறையாக இந்த சத்திர சிகிச்சையை மேற்கொண்டதாகவும், இது சுமார் 2 மணித்தியாலம்

இடம்பெற்றதன் பின்னர் அந்தக்கட்டியை அகற்ற முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார். 19.5 கி.கி நிறையையும் சுமார் 48 C.M நீளத்தையும் 34 C.M அகலத்தையும் 23 C.M உயரத்தையுமுடைய பெரும் கட்டி ஒன்றை வெட்டி அகற்றிய சாதனையை எமது வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள் வெற்றிகரமாக செய்து முடித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த சத்திர சிகிச்சையை மேற்கொண்ட சத்திர சிகிச்சை நிபுணர்களான எஸ்.எஸ்.ஜமீல், பீ.கே.ரவீந்திரன், மகப்பேற்று மற்றும் பெண்ணோயியல் வைத்திய நிபுணர் யுரேக்கா விக்ரமசிங்க, மயக்க மருந்து வைத்திய நிபுணர் றுவான் குருப்பு, மயக்க மருந்து மற்றும் சத்திரசிகிச்சை சிரேஷ்ட வைத்தியர்கள், சத்திர சிகிச்சை கூட தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார உதவியளர்கள் உள்ளிட்ட குழுவினரால் இது முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நோயாளிகளுக்காக பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலையின் புறச்சூழல் அழகுபடுத்தப்பட்டு சுற்றாடல் நேய செயற்றிடங்களும் அமுல் படுத்தப்படுவதாகவும் தாய்சேய் நலனிற்காக விசேட விடுதி ஒன்றும் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

Mon, 10/07/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக