மாணவியை தீமூட்டி கொன்ற 16 பேருக்கு மரண தண்டனை

மாணவி ஒருவரை தீமூட்டிக் கொன்ற குற்றச்சாட்டில் 16 பேருக்கு பங்களாதேஷ் நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்துள்ளது. தனது ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதை அடுத்தே அந்த மாணவி இவ்வாறு கொடூரமாக கொல்லப்பட்டார்.

தலைநகர் டாக்காவில் இருந்து 160 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் பெனி என்ற சிறு நகரிலேயே 19 வயது நுஸ்ரத் ஜஹான் ராபி என்ற மாணவி கடந்த ஏப்ரல் மாதம் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் மரண தண்டனை வழங்கப்பட்டவர்களில் நுஸ்ரத் பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய பாடசாலையின் தலைமை ஆசிரியர் மற்றும் இரு சக வகுப்பு மாணவியர்களும் உள்ளனர்.

அவரது கொலை பங்களாதேஷில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியதோடு குற்றவாளிகளை நீதிக்கு முன் கொண்டுவரும்படி ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றன.

இந்நிலையில் இவ்வாறான வழங்குகளுக்கு தீர்ப்பு அளிக்க பல ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் நிலையில் நாட்டில் விரையாக தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்காக இது உள்ளது. “பங்களாதேஷில் கொலையுடன் தொடர்புடைய எவரும் தப்பிக்க முடியாது” என்று அரச வழக்கறிஞர் ஹாபெஸ் அஹமட் குறிப்பிட்டார். இதற்கு எதிராக மேன்முறையீடு செய்வதாக பிரதிவாதிகள் சார்பிலான வழக்கறிஞர் குறிப்பிட்டார். நுஸ்ரத் கொலையின் பின்னணியில் சக வகுப்பு மாணவியர்கள் நகரின் அதிகாரம் பெற்றவர்கள் இருந்த நிலையில் அது பற்றிய விசாரணை மர்மமானதாகவும் அமைதியானதாக இருந்த வந்தது.

கல்லுௗரியின் தலைமை ஆசிரியர் சிராஜ் உத் டவுலா இந்த கொலைக்கு உத்தரவிட்டிருப்பதோடு மேலும் இரு ஆசிரியர்கள் தொடர்புபட்டுள்ளனர். அதேபோன்று ஆளும் அவாமி லீக் கட்சியில் உள்ளுர் தலைவர்கள் இருவரும் குற்றங்காணப்பட்டுள்ளனர்.

உள்ளுர் பொலி்ஸ் நிலையத்தில் பல அதிகாரிகளும் குற்றவாளிகளுடன் தொடர்புபட்டிருப்பதோடு நுஸ்ரத் தற்கொலை செய்து கொண்டதாக தவறாக செய்தியை பரப்பியுள்ளனர்.

தனக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு குறித்து கடந்த மார்ச் மாதம் பொலிஸ் நிலையம் சென்ற நுஸ்ரத்தின் முடிவை அவரது குடும்பத்தினர் ஆதரித்தனர். அவரது குடும்பத்தினர் அது தொடக்கம் பொலிஸ் பாதுகாப்புடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த தீர்ப்பை வரவேற்றிருக்கும் நுஸ்ரத்தின் குடும்பத்தினர் தண்டனையை விரைவாக நடைமுறைப்படுத்தும்படி கோரியுள்ளனர்.

பாடசாலையின் தலைமை ஆசிரியர் தம்மை முறையற்ற வகையில் தொடுவதாக பொலிஸில் முறையிட்ட நுஸ்ரம் 11 நாட்கள் கழித்து பாடசாலையின் கூரை மீது ஏறி எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து புர்கா அணிந்த நான்கு ஐந்து பேர் நுஸ்ரத்தை மடக்கிப் பிடித்து பொலிஸ் முறைப்பாட்டை வாபஸ் பெறும்படி எச்சரித்துள்ளனர். அதனை மறுத்ததை அடுத்தே அவர் தீமூட்டப்பட்டுள்ளார்.

இதனை ஒரு தற்கொலையாக மாற்ற பொலிஸார் முயன்றதாக கூறப்படுகிறது.

எனினும் மோசமான தீ காயங்களுக்கு உள்ளான நுஸ்ரத் தனது சகோதரரின் கையடக்க தொலைபேசியில் நடந்த சம்பவத்தை வாக்குமூலமாக பதிவு செய்துள்ளார். “ஆசிரியர் என்னை தொட்டார்.

இந்தக் குற்றத்திற்காக இறுதி மூச்சுவரை போராடுவேன்” என்று குறிப்பிட்ட அவர் தன்னை தாக்கிய சிலரின் பெயர்களையும் குறிப்பிட்டார்.

உடலின் 80 வீதம் தீக்காயத்திற்கு உள்ளான நுஸ்ரத் நான்கு நாட்களின் பின் கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி உயிரிழந்தார்.

Fri, 10/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை