தாய்வானில் 140 மீ. பாலம் இடிந்து ஆறு பேர் மாயம்

தாய்வானின் வடகிழக்குப் பகுதியில் கடற்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது மூன்று மீனவப் படகுகள் மற்றும் அதிலிருந்த ஆறு மீனவர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

இச்சம்பவம் நேற்றுக் காலை நிகழ்ந்தது. பாலம் இடிந்து விழுந்தபோது அதன் மேல் சென்றுகொண்டிருந்த ஒரு எண்ணெய் லொரி திடீரென தீப்பிடித்துக்கொண்டது.

இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட ஆறு பேரை தேடி மீட்கும் முயற்சியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சிக்கிக்கொண்டவர்களில் பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.

இந்த விபத்தில் குறைந்தது 12 பேர் கடுமையாகக் காயமடைந்ததாக உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்தன.

சுமார் 140 மீற்றர் நீளம் கொண்ட அந்தப் பாலம் இடிந்து விழுவதைக் காட்டும் வீடியோ ஒன்று, சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அந்தப் பாலத்தில் லொரி ஓட்டுநர் பாதி தூரத்திற்கு மேல் கடந்துவிட்ட நிலையில் பாலம் திடீரென இடிந்து விழுந்ததை அந்த வீடியோ காட்டியது.

1998ஆம் ஆண்டு கட்டப்பட்ட அந்தப் பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

Wed, 10/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை