மெக்சிகோவில் பதுங்கி நடத்திய தாக்குதலில் 14 பொலிஸார் பலி

மேற்கு மெக்சிகோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு ஒன்றில் பதினான்கு பொலிஸார் கொல்லப்பட்டு மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

மிசோக்கல் மாநிலத்தின் எல் அகுவேஜேவின் நீதிமன்ற உத்தரவு ஒன்றை செயற்படுத்த நடவடிக்கை எடுத்த பொலிஸாரின் வாகனங்கள் இடைமறித்து தாக்கப்பட்டுள்ளன.

பலம்மிக்க குற்றக் கும்லான ஜலிஸ்கோ நுவேவா கரேசியோன் இந்தத் தாக்குதலை நடத்தியதாக நம்பப்படுகிறது. அனைத்து வளத்தையும் பயன்படுத்தி இந்தத் தாக்குதலுக்கு தொடர்புடையவர்களை கண்டுபிடிப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தாக்குதல் இடம்பெற்ற பிராந்தியம் போதைக் கடத்தல் கும்பல்களுக்கு இடையிலான வன்முறைகள் அதிகரித்த பகுதியாகும்.

கடந்த டிசம்பரில் பதவி ஏற்ற ஜனாதிபதி அன்ட்ரெஸ் லோபஸ் போதைக் குற்றங்களை தடுப்பதற்கு கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதில் நகரத்தின் ஊடே செல்லும்போதே பொலிஸ் ரோந்து வாகனங்கள் தாக்கப்பட்டுள்ளன. ஆயுதங்களை ஏந்தி வந்தவர்கள் பொலிஸ் வாகனங்களை சுற்றிவளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி இருப்பதோடு பின்னர் அந்த வாகனங்களை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

அரசு போதைக் கடத்தல்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் கடந்த ஆண்டில் சாதனை எண்ணிக்கையாக 29,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Wed, 10/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை