அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு பழைய மாணவர்களால் 03 குடிநீர் தாங்கிகள்

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு சுத்தமானதுமான குடிநீரை வழங்கும் பொருட்டு கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினால் 03 குடிநீர் தாங்கிகளும் தேவையான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

பழைய மாணவர் சங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று இக் கல்லூரியில் கல்வி கற்ற 1999 ஆம் ஆண்டு மாணவர்கள் இணைந்து இரண்டு இலட்சத்திப் பத்தாயிரம் ரூபா பெறுமதியான 03 குடி நீர் தாங்கிகளையும் அதற்குத் தேவையான உபகரணங்களையும் அன்பளிப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குடிநீர் தாங்கிகளையும் அதற்குத் தேவையான உபகரணங்களையும் அன்பளிப்பு செய்யும் நிகழ்வு நேற்று (30) இடம் பெற்றது.

கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயலாளர் ​ெடாக்டர் எம்.எம்.தமீம், பொருளாளர் பொறியியலாளர் எஸ்.முர்ஸித் சரீப் உட்பட பழைய மாணவர் சங்க நிருவாக சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிபர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

(அக்கரைப்பற்று தினகரன் சுழற்சி நிருபர்)

Tue, 10/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை