சொத்து விபரங்களை ஒப்படைக்க எம்.பிக்களுக்கு காலக்ெகடு

சொத்து விபரங்களை பிரகடனப்படுத்தும் நடைமுறை பாராளுமன்றத்திலுள்ள 225 எம்.பிக்களுக்கும் கட்டாயப்படுத்தப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க நேற்று தெரிவித்தார்.

இதன் மூலமே மக்களுக்கு பொறுப்புக்கூறும் பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவை உருவாக்க முடியுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

அலரி மாளிகையில் நேற்று காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது-

எரிபொருள் விலையை மீண்டும் குறைத்துள்ளதன் மூலம் இந்த அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பாரிய சேவையை வழங்கியுள்ளது. அத்துடன் கடன் சுமைக்கு மத்தியிலும் இந்த அரசாங்கம் மக்களுக்கு பெற்றோல் , டீசலுக்குப் புறம்பாக எரிபொருள் விலையை குறைத்து வழங்கியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விவரங்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் தற்போது பேசப்பட்டு வருகின்றன. 225 எம்.பிக்களும் ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் தமது சொத்து விவரங்களை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

எனது சொத்து விவரங்கள் பற்றிய தகவல்களை பொதுமக்களுக்குப் பெற்றுக் கொடுக்க நான் தீர்மானித்துள்ளேன். இது பாராளுமன்றத்திலுள்ள 225 உறுப்பினர்களுக்கும் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 

Thu, 09/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை