அணு கட்டுப்பாடுகளை மீறுவதற்கு ஈரான் முடிவு

அணு ஆராய்ச்சி மற்றும் சோதனையில் இருக்கும் அனைத்து எல்லைக் கோடுகளையும் ஈரான் நீக்கவுள்ளது. 2015 அணு ஒப்பந்த உடன்படிக்கைகளை மீறி மீண்டும் ஈரான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

செறிவூட்டப்பட்ட யுரேனியம் தயாரிப்பை விரைவுபடுத்த மையநீக்கிகளை உருவாக்க ஆரம்பித்து விட்டதாக அந்நாட்டுத் தலைவர் ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அணு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா, மீண்டும் ஈரான் மீது பொருளாதார தடைகள் விதித்தது. அதற்கு பதிலடியாக ஏற்கனவே ஒப்பந்த உடன்படிக்கைகளை ஈரான் இருமுறை மீறிவிட்டது.

3.5 வீதம் அளவிற்கு குறைந்த செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அணுஉலைகளுக்கு எரிபொருளாக பயன்படுத்தலாம். ஆனால் 90 வீதம் அளவிற்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும்.

ஆனால், அமைதியான சூழலுக்கான நோக்கத்திலேயே அணு திட்டத்தை செயல்படுத்துவதாக ஈரான் மீண்டும், மீண்டும் கூறி வருகிறது. இதன்போது மசகு எண்ணெய் ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்தால்தான் வல்லரசு நாடுகளுடன் செய்துகொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துவோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை இணையமைச்சர் அப்பாஸ் அரக்சி கடந்த புதன்கிழமை கருத்து வெளியிடும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “கடந்த 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள இரண்டு நிபந்தனைகளின் அமுலாக்கத்தை நிறுத்திவைத்துள்ளோம். அந்த ஒப்பந்தத்தை நாங்கள் மீண்டும் முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்றால், மசகு எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும். இல்லையென்றால், அணு சக்தி ஒப்பந்த நிபந்தனைகளை 3ஆவது கட்டமாக நாங்கள் மீறுவோம” என அவர் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தம் 2015ஆம் ஆண்டில் கையெழுத்தானது.

Fri, 09/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை