ஊனமுற்ற படைவீரர்களின் சத்தியாக்கிரகம், உண்ணாவிரதம் நிறைவு

ஊனமுற்ற படைவீரர்களின் சத்தியாக்கிரகம், உண்ணாவிரதம் நிறைவு-Disabled-Soldiers-Fast-unto-Death-Called-Off-Sajith-Premadasa

பிரச்சினையை அமைச்சரவைக்கு கொண்டு செல்வதாக சஜித் உறுதியளிப்பு

ஊனமுற்ற படைவீரர்கள் மற்றும் அவர்களது மனைவிமார் கடந்த 20 நாட்களாக, கோட்டை ரயில் நிலையம் முன்பாக மேற்கொண்டு வந்த சத்தியாகிரகம் மற்றும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று (30) குறித்த இடத்திற்கு சமூகமளித்திருந்ததோடு, அவர்களது பிரச்சினைகள் குறித்து நாளை (01) இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்திற்கு கொண்டு வந்து மீண்டும் அவர்களை சந்திப்பதாக அவர் இதன்போது வாக்களித்திருந்தார்.

தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையை கருத்திற் கொண்டு, தமது சத்தியாகிரகம் மற்றும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாக, படை வீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் யூ.டி. வசந்த தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் இன்றைய தினம் அங்கு சமூகமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mon, 09/30/2019 - 15:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை