வெளிநாட்டு குப்பைகளை திருப்பி அனுப்பிய இந்தோனேசியா

இந்தோனேஷியாவுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக அனுப்பப்பட்டிருந்த சுமார் 250க்கும் மேற்பட்ட குப்பை நிரப்பப்பட்ட கொள்கலன்கள் அந்தந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இவை அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஹொங்கொங், அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்ததாக இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தோனேஷியாவிற்கு சட்டவிரோதமாக எடுத்து வரப்பட்ட இந்த கொள்கலன்களில் நச்சுத்தன்மை மிக்க, அபாயகரமான பொருட்கள் இருக்கக்கூடும் என்பதால் அவை திருப்பி அனுப்பப்பட்டதாக குறித்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Fri, 09/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை