கராத்தே தர நிர்ணய சான்றிதழ் வழங்கும் விழா

ஜப்பான் ஷோட்டோகன் ஆர்.யு.யு கென்ஷின்காய் இலங்கை கிளை கராத்தே தர நிர்ணய சான்றிதழ் வழங்கும் விழா அண்மையில் கொழும்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இது இலங்கை கிளையின் தலைமை பயிற்றுவிப்பாளரும் பிரதிநிதியுமான ஷிஹான் எம்.சி.எம். நாசர். தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சுமார் 226 மாணவர்கள் சான்றிதழ்கள் பெற்றனர்.

இலங்கை கராத்தே தேசிய பயிற்சியாளர் மற்றும் 2016ம் ஆண்டு உலக கராத்தே சம்பியன் ஷிஹான் மஹ்தி கரிமி பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர். இந்த நிகழ்வில் கொழும்பு சாஹிரா கல்லூரி மாணவர்கள் எம். ஆர். எம். சுஹைல், அமீர் அத்னான் மற்றும் ஆகிப் அகமது ஆகிய மூன்று மாணவர்கள் கறுப்பு பட்டியை பெற்றனர்

கொழும்பு சாஹிரா கல்லூரி அதிபர் ரிஸ்வி மரிக்கர், ஐக்கிய நாடுகள் சங்கத்தின் நிர்வாகத் தலைவர் டாக்டர் எம்.எம்.எம்.ருஷானுதீன் மற்றும் கொழும்பு நகர மரண விசாரணை அதிகாரி அஷ்ரப் ரூமி ஆகியோர் கெளரவ அதிதியாக கலந்து கொண்டனர்.

ருஸைக் பாரூக்

Fri, 09/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை