இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கெரி கேர்ஸ்டன்?

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கெரி கேர்ஸ்டனை நியமிக்க, இங்கிலாந்து கிரிக்கெட் சபை பரிசீலித்து வருகின்றது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த டிரோவர் பெய்லிஸின் பதவிக்காலம், நடைபெற்று முடிந்த ஆஷஸ் தொடரோடு முடிவடைந்தது.

தென்னாபிரிக்க அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரராகவும், சிறந்த பயிற்சியாளராகவும் விளங்கிய கெரி கேர்ஸ்டன், ஒருநாள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணியாற்ற விருப்பம் தெரிவித்திருந்தார்.

ஆனால் ஒவ்வொரு வகையான கிரிக்கெட்டிற்கும் ஒவ்வொரு பணியாற்சியாளர்கள் வைத்துக் கொண்டால், அவர்களுக்குள் பிரச்சினை உண்டாகும் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை எண்ணியது.

இதனால் கெரி கேர்ஸ்டன் மூன்று வகை கிரிக்கெட்டிற்கும் தலைமை பயிற்சியாளராக நியமிக்க இங்கிலாந்து ஆர்வம் காட்டுகிறது. இதை கெரி கேர்ஸ்டன் ஏற்றுக் கொள்ளுவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.

எதிர்வரும் நவம்பர் மாதம் நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி, அங்கு சென்று ரி-20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளது.

இதற்கு முன்னதாக பயிற்சியாளர் ஒருவரை நியமிப்பதற்கான முயற்சிகளில், தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் சபை தீவிரமாக இறங்கியுள்ளது.

இதற்கு முன்னதாக கெரி கேர்ஸ்டன், 2011ஆம் ஆண்டு தொடக்கம் 2013ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், தென்னாபிரிக்கா அணியின் பயிற்சியாளராக செயற்பட்டார். ஜூன் 5ஆம் திகதி பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார்.

இந்த காலப்பகுதியில் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்க அணி, 2--0 என கைப்பற்றியது. குறிப்பாக டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய தென்னாபிரிக்கா அணி, டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தையும் பிடித்தது.

இதனைத் தொடர்ந்து, 2008ஆம் ஆண்டு இந்தியக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை கெரி கேர்ஸ்டன், ஏற்றார்.

நியூஸிலாந்தில் அந்த அணிக்கெதிராக ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை 40 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்ற முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

மேலும், 2008ஆம் ஆண்டு ஆசியக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறுவதற்கு காரணமாக இருந்த அவர், 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கிண்ணத்தை ஏந்துவதற்கும் முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

அவுஸ்ரேலியாவில் நடைபெறும் பிக் பேஷ் தொடரில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கும் தலைமை பயிற்சியாளராக செயற்படுகிறார்.

இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். தொடரில் 2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை, பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்காவும் பயிற்சியாராக செயற்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு உலகக்கிண்ண சம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக செயற்பட்ட பெய்லிசும், உலகின் சிறந்த பயிற்சியாளராகவே பார்க்கப்படுகிறார்.

பெய்லிஸ் தலைமையில் 2015ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற அவுஸ்ரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது.

இதனையடுத்து, 2017ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கெதிரான தொடரிலும், 2018ஆம் ஆண்டு இந்தியா அணிக்கெதிரான தொடரிலும், இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.

2015- - 2016ஆம் ஆண்டு பருவக்காலத்தில் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரையும், 2018-2019ஆம் ஆண்டு பருவக்காலத்தில் இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரையும் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

மேலும், மார்ச் 2017ஆம் ஆண்டு முதல் மே 2019ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 11 முதன்மையான ஒருநாள் தொடரை இங்கிலாந்து வென்றுள்ளது.

2017- - 2018ஆம் ஆண்டு பருவக்காலத்தில் அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 4-1 எனவும், 2018ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 5-0 எனவும் இங்கிலாந்து அணி கைப்பற்றியது. 2019ஆம் ஆண்டு முதல் முறையாக இங்கிலாந்து அணி, உலகக்கிண்ணத்தை வென்று சரித்திரம் படைத்தது.

2016ஆம் ஆண்டு ரி-20 உலகக்கிண்ண தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறியது.

மேலும், இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். தொடரில், 2012ஆம் மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் இவரது பயிற்சியின் கீழ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி சம்பியன் பட்டம் வென்றது.

இவரது தலைமையில் 2011ஆம் ஆண்டு இலங்கை அணி உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறியது.

Sat, 09/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை