மலையகம்: சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை பெற்றுக் கொடுப்போம்

மக்கள் இயக்கத்திற்கு மக்கள் பலத்தை வழங்கினால் தோட்ட தொழிலாளர்களின் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என

ஹற்றனில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஹற்றனில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இதுவரை காலமும் நாட்டை ஆட்சிசெய்தவர்கள் பெருந்தோட்ட மக்களுக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் எதனை செய்து கொடுத்துள்ளார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் தேர்தல் வருகின்ற போது அமைச்சர்கள், தோட்ட தொழிலாளர்களின்

பிரச்சினைகள் தீர்க்கப்படும் என வாக்குறுதி அளித்துச் செல்கின்றனர். பிள்ளைகளின் கல்வி மற்றும் பாடசாலை கட்டிடம் , சுகாதாரம் போன்றவைகளை அபிவிருத்தி செய்து தருவதாக கூறுகிறார்கள். ஆனால் இவை எதனையும் செய்து கொடுப்பதில்லை. அதேபோல் தோட்டப்பகுதிகளில் உள்ள வீதிகளை அபிவிருத்தி செய்வதாக வாக்குறுதி வழங்கினார்கள். இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பினை பெற்றுப் கொடுப்பதாக வாக்குறுதி வழங்கினார்கள். ஆனால் 72 வருடங்கள் கடந்தும் இவர்கள் வழங்கிய வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேற்ற முடியாத ஆட்சியாளர்களாக காணப்படுகிறார்கள்.

மலையகத்தில் வாழுகின்ற மக்களுக்கும் அனேகமான பிரச்சினைகள் இருக்கின்றன. தோட்டப் பகுதியில் தொழில்புரிகின்ற தொழிலாளர்களுக்கு ஏற்றவாறு சம்பளம் கிடைக்கிறதா. இல்லை நாட்டில் ஆட்சி செயதவர்கள் வேலைசெய்யும் மக்கள் பக்கம் இருந்ததில்லை.

தோட்டங்களை நிர்வகிக்கும் உரிமையாளர்கள் பக்கம் தான் ஆட்சியாளர்கள் இருகின்றார்கள்.

ரணில் விக்கிரமசிங்க, நவீன் திஸாநாயக்க போன்றவர்கள் எல்லாம் தோட்ட உரிமையாளர்கள் பக்கமே இருப்பார்கள்.

இன்று தோட்டத்தொழிலாளர்களுக்கு குறைந்த அளவிலான சம்பளமே கிடைக்கிறது. தோட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் நோக்கில் சிறந்த முறையிலான வேதனத்தை பெற்று கொடுக்கும் நடவடிக்கையினை எங்கள் மக்கள் சக்தி முன்னெடுக்கும் எனவும் குறிப்பிட்டார்.

நோர்ட்டன் பிரிட்ஜ் நிருபர்

Mon, 09/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை