சிங்கள மொழி கற்கை நெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

தேசிய ஒருமைப்பாடு  அரச கரும மொழிகள்  சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அமைச்சர் மனோ கணேசனின்  வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கே.ஆர்.எம்  றிஸ்கானின் முயற்சியினால் முன்னெடுக்கப்பட்ட அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான சிங்கள மொழி கற்கை நெறியினை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கௌரவிப்பும் கடந்த  வெள்ளிக்கிழமை (27)   கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி கூட்ட மண்டபத்தில்  நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் இரண்டாம் மொழியினை விருத்தி செய்யுமுகமாக சிலோன் மீடியா போரத்தின் வேண்டுகோளிற்கினங்க இக்கற்கை நெறி சாய்ந்தமருது பிரதேச செயலகத்திலும் நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்திலும் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஸன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட செயலக தேசிய ஒருமைப்பாடு மேம்பாட்டு உத்தியோகத்தர் பி.பிரதீஸ்கரன், சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜவ்பர், சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ மஜீத்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கற்கை நெறியினை ஊடகவியலாளர்களுக்கு வழங்குவதற்கு அமைச்சர் மனோ கணேசனின் விசேட அனுமதியினை பெற்றுத்தந்த அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கே.எம்.றிஸ்கான் சிலோன் மீடியா போரத்தின் பிரதிநிதிகளால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

சிங்கள மொழி கற்கை நெறியினை வெற்றிகரமாக பூர்த்தி செய்த  ஊடகவியலாளர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களிற்கு  அரச கரும மொழிகள் திணைக்களத்தின் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் இக்கற்கை நெறியானது  100 மணித்தியாலயங்கள் கொண்டதுடன்  12 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

(சாய்ந்தமருது தினகரன் நிருபர்)

Sun, 09/29/2019 - 15:33


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை