சம்பள பிரச்சினைகள் குறித்து ஊழியர்களுடன் பேசத்தயார்

வேலைநிறுத்த போராட்டங்களை  கைவிடுமாறு அமைச்சர் கோரிக்கை

அரசாங்க ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் தயாராக இருப்பதாகவும் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப்போராட்டங்களில் ஈடுபட்டு பொதுமக்களை அசௌகரியத்திற்கு உட்படுத்தக் கூடாது எனவும் பொது நிர்வாக, முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார கேட்டுக்கொண்டுள்ளார்.

தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடாது பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தொழிற்சங்கங்கள் முன்வர வேண்டும் என குறிப்பிட்ட அமைச்சர் அவ்வாறான போராட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தார். பல்வேறு அரசியல் நோக்கங்களுக்காக சதி நடவடிக்கை ளில்

ஈடுபட்டு தொழிற்சங்கங்கள் பொதுமக்களை அசௌகரியத்திற்கு உட்படுத்தக் கூடாது என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசாங்க ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் எப்போதும் தயாராக உள்ளதாகவும் அரச ஊழியர்களின் சம்பளம் 107 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அரசாங்கம் வழமையைவிட இரண்டு மடங்கு நிதியை அதிகமாக ஒதுக்கியுள்ளது.

நிறைவேற்று அதிகாரிகளின் சம்பள முரண்பாடு தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்னும் முழுமையான அனுமதி கிடைக்கவில்லை.

இதனை அடிப்படையாகக் கொண்டு எந்த தரப்பினருக்காகவாவது பாதிப்பு ஏற்படுமாயின் அந்த தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.(ஸ)

 

Mon, 09/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை