நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதில் எந்தக் கட்சிகளும் பின்னிற்க முடியாது

அமைச்சரவையில் நிராகரிக்கப்பட்டமைக்கு நான் பொறுப்பல்ல

நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்கும் நடவடிக்கையிலிருந்து எந்தவொரு அரசியல் கட்சியும் விலகிநிற்க முடியாதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அமைச்சரவையில் தற்போது அதற்கான யோசனை நிராகரிக்கப்பட்டபோதிலும், ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்தவுடன் அதனை நிறைவேற்றுவதற்குத் திடசங்கற்பம் பூண்டிருப்பதாகவும் பிரதமர் கூறினார்.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற விசேட

அமைச்சரவைக் கூட்டத்தில், நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான யோசனை நிராகரிக்கப்பட்டமைக்குத் தாம் பொறுப்பல்லவென்று தெரிவித்த பிரதமர், அந்தக் கூட்டத்தை அவசரமாகக் கூட்டியவர் ஜனாதிபதியே என்றும் சுட்டிக்காட்டினார்.

பஸ்யாலயில் நடைபெற்ற மும்மொழிப் பாடசாலைக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் பிரதமர் உரையாற்றினார்.

அங்கு உரையாற்றிய பிரதமர் மேலும் கூறுகையில்,

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதா? அல்லது புதிய அரசியலமைப்பின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்துவதா? என்பதைப் பற்றி அனைத்து அரசியல் கட்சிகளும் மக்கள் மத்தியில் தத்தம் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

2015இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போதும் அந்த வருடத்தின் ஓகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலின்போதும் நாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

"நாட்டின் ஜனநாயகத்தையும் மக்களின் இறைமையையு பாதுகாத்துக்கொண்டு தேசிய ஒருமைப்பாடு, அபிவிருத்தி ஆகியவற்றைக் கட்டியெழுப்புவது ஒவ்வொருவரதும் கடப்பாடாகும். இந்த மாற்றம் தொடர்பில் அரசியல் கட்சிகளுக்குத் தெளிவான ஒரு நிலைப்பாடு இருக்க வேண்டும். மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வு காண்பதில் இனிமேலும் தாமதப்படுத்த முடியாது. இதுவிடயத்தில் அனைத்துக் கட்சிகளும் சரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். நாடு மற்றொரு தடவை அழிவைநோக்கிச் செல்வதற்கு எவரும் அனுமதிக்க முடியாது அமைச்சரவைக் கூட்டத்தில், நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான யோசனை நிராகரிக்கப்பட்டமைக்குத் தாம் பொறுப்பல்லவென்று தெரிவித்த பிரதமர், அந்தக் கூட்டத்தை அவசரமாகக் கூட்டியவர் ஜனாதிபதியே என்றும் சுட்டிக்காட்டினார்.

பஸ்யாலயில் நடைபெற்ற மும்மொழிப் பாடசாலைக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் பிரதமர் உரையாற்றினார்.

அங்கு உரையாற்றிய பிரதமர் மேலும் கூறுகையில்,

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதா? அல்லது புதிய அரசியலமைப்பின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்துவதா? என்பதைப் பற்றி அனைத்து அரசியல் கட்சிகளும் மக்கள் மத்தியில் தத்தம் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

2015இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போதும் அந்த வருடத்தின் ஓகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலின்போதும் நாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

"நாட்டின் ஜனநாயகத்தையும் மக்களின் இறைமையையு பாதுகாத்துக்கொண்டு தேசிய ஒருமைப்பாடு, அபிவிருத்தி ஆகியவற்றைக் கட்டியெழுப்புவது ஒவ்வொருவரதும் கடப்பாடாகும். இந்த மாற்றம் தொடர்பில் அரசியல் கட்சிகளுக்குத் தெளிவான ஒரு நிலைப்பாடு இருக்க வேண்டும்.

மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வு காண்பதில் இனிமேலும் தாமதப்படுத்த முடியாது. இதுவிடயத்தில் அனைத்துக் கட்சிகளும் சரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். நாடு மற்றொரு தடவை அழிவைநோக்கிச் செல்வதற்கு எவரும் அனுமதிக்க முடியாது .

எம்.ஏ.எம்.நிலாம்

Sat, 09/21/2019 - 06:00

from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை