துப்பாக்கி விற்பனையை நிறுத்தியது வோல்மார்ட்

அமெரிக்காவின் வோல்மார்ட் பேரங்காடி கைத் துப்பாக்கிகளை விற்பனை செய்வதை நிறுத்திக்கொண்டுள்ளது. கடைகளுக்குள் துப்பாக்கிகளைக் கொண்டு வர வேண்டாம் என்றும் அது வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டது.

டெக்சஸ் மாநிலத்தில் வோல்மார்ட் பேரங்காடியில் ஒரு மாதத்துக்கு முன் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 20க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

அதைத் தொடர்ந்து, துப்பாக்கி விற்பனையைக் குறைத்துக்கொள்வது பற்றி வோல்மார்ட் அறிவித்துள்ளது. துப்பாக்கிப் பாதுகாப்புச் சட்டங்களை இயற்றுவதற்கும் அது பாராளுமன்றத்துக்கு நெருக்குதல் அளித்து வருகிறது.

வேட்டைக்குப் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் போன்ற நீளமான துப்பாக்கிகளை வோல்மார்ட் தொடர்ந்து விற்பனை செய்யும். வோல்மார்ட் அதன் சுமார் 3,900 கடைகளில் துப்பாக்கிகளை விற்பனை செய்துவருகிறது.

Thu, 09/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை