தலவாக்கலையில் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் விபத்து

ஹட்டன் , நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பாக தெரிய வருவதாவது தலவாக்கலையிலிருந்து கூம்மூட் நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்றும் கந்தபொல பகுதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

தலவாக்கலை நகரிலிருந்து குறுக்கு வீதியொன்றுக்கு முச்சக்கரவண்டியை திருப்ப முற்பட்டபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியோடு மோதுண்டது.

இவ்விபத்து 31.8.2019 சனிக்கிழமை மாலை 4 மணிளவில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் மோட்டார் சைக்கிளை செலுத்தியவரும் சிறுகாயங்களுக்குள்ளாகினர். இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தலவாக்கலை குறூப் நிருபர்

Mon, 09/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை