மிகப்பெரிய நியூத்திரன் நட்சத்திரம் கண்டுபிடிப்பு

விண்வெளி ஆய்வாளர்கள் மிகப்பெரிய நியூத்திரன் நட்சத்திரத்தை கண்டுபிடித்துள்ளனர்.

பிரபஞ்சத்தில் நியூத்திரன் நட்சத்திரங்கள் பொதுவாக சிறியவையாகும். அதன் பரப்பளவு சிகாகோ அல்லது அட்லாண்டா போன்ற சிறுநகரின் பரப்பேயாகும். விண்ணின் கழித்துவிடப்பட்ட பிறவிகள் அவை என்பது போல் தோன்றும். ஆனால் அவை அடர்த்தியானவை. சூரியனை சுருக்கி ஒரு பெருநகரமாக மாற்றியது போன்று அவை உள்ளன.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நியூத்திரன் நட்சத்திரம் பூமியை விடவும் 3 லட்சத்தி 33 ஆயிரம் மடங்கு நிறை உடையதாகும். இது சூரியனைவிட 2 புள்ளி 3 மடங்கு அதிகமாகும்.

இது பூமியை விட்டு 4 ஆயிரத்து 600 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. மேற்கு விர்ஜினிவாவில் கிரீன் பேங்க் தொலைநோக்கி மூலம் இந்த நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Wed, 09/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை