புதிய நிபந்தனைகளுடன் அமெரிக்காவுடன் பேச முடியாது

ஈரான் திட்டவட்டமாக நிராகரிப்பு

யுரேனியம் செறிவூட்டல் தொடர்பில் புதிய நிபந்தனைகளுடன்,அமெரிக்காவுடன் பேச்சு நடத்தப் போவதில்லையென ஈரான் ஜனாதிபதி ஹஸன்ருஹானி அறிவித்துள்ளார். பாராளுமன்ற த்தில்,உரையாற்றிய போதே அவர் இவ்விடயத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்தார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஈரான் ஜனாதிபதி தெரிவித்ததாவது :2015 இல் இணங்கிய நிபந்தனைகளுடன் பேசுவதற்கு ஈரான் தயார். எனினும் மேலைத்தேய நாடுகளின் புதிய நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளாது.பழைய நிபந்தனைகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளே

உரிய பலன்களைத் தரவில்லை.இந்நிலையில் புதிய நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள முடியாது.

யுரேனியம் செறிவூட்டல் விடயங்கள் ஈரானின் உள்விவகாரம்,பாதுகாப்பு விடயங்கள் சார்ந்தவை. வெளிச்சக்திகள் இதில் எல்லை மீறி தலையிட முடியாதென்றும் அவர் குறிப்பிட்டார்.

அணுவாயுத உற்பத்தி,யுரேனியம் செறிவூட்டலில் ஈரான் ஈடுபட்டதற்காக ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் ஈரான் மீது பொருளாதாரத் தடை விதித்தது.அயல் நாடுகளை அச்சுறுத்தும் நோக்கில் இவ்வாறு இரசாயன,நாசகார ஆயுதங்களைப் பாவி ப்பதாகக் கூறியே அமெரிக்கா தடைவித்தித்தது. இந்தத் தடைகளில் சில நீக்கப்பட்டதையடுத்து முன்னெடுக்கப்பட்ட பேச்சுக்களிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதனால் 2018 மே மாதத்தின் இறுதிப் பகுதியில்,மீண்டும் ஈரானுக்குத் தடைவித்தித்த அமெரிக்கா ஏற்கனவே எட்டப்பட்ட அணுவாயுத உடன் படிக்கைகளையும் ரத்துச் செய்தது.

இந்தப்பட்ட நிலைகளைப் போக்கும் பொருட்டு பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மெக்ரோன் பெரும் பிரயத்தனைங்களை மேற்கொண்டும் அவை பலிக்கவில்லை.

ஜீ 07 மாநாட்டில் ஈரான் ஜனாதிபதியைச் சந்தித்த பிரான்ஸ் ஜனாதிபதி இணக்கப்பாடுகளை எட்டுவதற்கு எடுத்த முயற்சிகள் தோற்றுப் போயுள்ள நிலையிலே ஈரான் இவ்வாறு அறிவித்துள்ளது.ஏற்கனவே விதிக்கப்பட்ட தடைகள் அனைத்தையும் நீக்கினால் மாத்திரமே பேச முடியுமென்பதில் ஈரான் விடாப்பிடியாகவுள்ளது.இதனால் பிராந்தியத்தில் பெரும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் தொடர்பான உடன் படிக்கை 2015 இல் கைச்சாத்திடப்பட்டது.

பிரிட்டன்.பிரான்ஸ்,ரஷ்யா,சீனா,அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து வல்லரசுகளும் ஜேர்மனியும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டன.

Wed, 09/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை