தெற்காசியாவில் அதிஉயர் கோபுரம் இன்று திறப்பு

தாமரை கோபுரம்

தெற்காசியாவின் மிகஉயர்ந்த கோபுரமான கொழும்பு தாமரைக்கோபுரம் (16 ) இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோகப்பூர்வமாகத் திறந்துவைக்கப்படவுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

சீனாவின் நிதியுதவியுடன் சுமார் 104 மில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்தக் கோபுரம் 356 மீற்றர் உயரம் கொண்டது.

உணவகங்கள், சுப்பர்மார்க்கட், 5 நட்சத்திர ஹோட்டல்கள், திரையரங்கு, தொடைத்தொடர்பு அருங்காட்சியகம் மற்றும் ஒரே தடவையில் சுமார் ஆயிரம் பேர் அமரக் கூடிய மாநாட்டு மண்டம் ஆகியன இந்தக் கோபுரத்தில் உள்ளன.

இதில் இணைய வசதிகள் உட்கட்டமைப்பு நிறுவுதலின் கீழ் பெற்றுக்கொடுக்கப்படும் சேவைகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படும். முதலாவது தாமரைக் கோபுரப் பகுதியில் நிறுவப்பட்டிருக்கும் பாரிய அளவிலான நிறுவனங்கள் உட்பட சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகம் என்பவற்றுக்கு அதில் பிரவேசிக்கக் கூடிய சாதாரண மக்களுக்கும் தேவையான சகல தொடர்பாடல் வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல்.

அதேபோன்று நாட்டில் உள்ள ஏனைய தகவல் தொடர்பாடல் சேவை வழங்குநர்களுக்கான தேவையான தொடர்பாடல் உட்கட்டமைப்பு எஸ்.எல்.டி ( SLT) ஸ்ரீலங்கா டெலிகொம் ஊடாகப் பெற்றுக்கொடுத்தல்.

பிரதான தொலைத்தொடர்பாடல் உட்கட்டமைப்பு அபிவிருத்தியின் கீழ் இந்த இரு செயற்பாடுகளுக்கு மேலதிகமாக தாமரைக் கோபுரம் டிஜிட்டல் தொலைக்காட்சி ஒளிப்பரப்பு கோபுரமாக பயன்படுத்தும் போது அந்தந்த தொலைக்காட்சி அலைவரிசை கலையகங்களிலிருந்து நேரடியாக தாமரைக் கோபுரத்திற்கு அனுப்புவதற்கு ஏற்ற விதத்தில் சகல இணையத் தொடர்புகளையும் வழங்குபவர்களாக ஸ்ரீலங்கா டெலிகொம் இருப்பார்கள்.

இந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் மேலதிகமாக உள்ளக தொலைத்தொடர்பு கட்டமைப்பு LAN, WIDE AREA NETWORK, IP TV கட்ட முகாமைத்துவம், தகவல் பரிமாற்றம், வீடியோ கட்டுப்பாடு, மக்கள் தொடர்பு மையம், எச்சரிக்கை கட்டமைப்பு உட்பட அடிப்படை வசதிகள் போன்றவற்றை ஸ்ரீலங்கா டெலிகொம் ஊடாக பெற்றுக்கொடுக்கப்படும்.

Mon, 09/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை