மலேசியாவில் பிற சமயங்களுடனான பிரார்த்தனைக்கு முஸ்லிம்களுக்கு தடை

மலேசியாவில் முஸ்லிம்கள் பிற சமயத்தினருடன் கூட்டு வழிபாடு நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாகப் பிரதமர் அலுவலகத்தின் கீழ் செயல்படும் அரசாங்க அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. தேசிய ஒற்றுமை, ஒருங்ணைப்புப் பிரிவின் கீழ் செயல்படும் குழு ஒன்று உத்தரவைப் பிறப்பித்தது. சமயங்களிடையே நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவது குழுவின் பணி.

நிகழ்வுகளுக்கு முன் மற்ற சமயங்களைச் சேர்ந்தவர்கள் வாய்விட்டு வழிபடும்போது ‘துவா’ எனப்படும் பிரார்த்தனைகளில் முஸ்லிம்கள் ஈடுபடக் கூடாது என்றும், முஸ்லிம் அல்லாதவர்களுடன் வழிபாட்டில் ஈடுபடக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது.

வழிபாட்டுக்குப் பதிலாக சமயங்களிடையே ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுமாறு ‘ஜாக்கிம்’ எனப்படும் மத்திய இஸ்லாமிய விவகாரப் பிரிவு ஆலோசனை தெரிவித்துள்ளது.

மற்ற சமயங்களுடன் பிரார்த்தனை நடத்தும் போது முஸ்லிம்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே தங்கள் பிரார்த்தனைகளைச் செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது.

சமயங்களுக்கு இடையிலான புரிந்துணர்வுக்குத் தடை இடையூறாக இருப்பதாய் மற்ற சமய அமைப்புகள் கருத்துத் தெரிவித்துள்ளன.

Fri, 09/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை