இமாம் ஹூசைன் (ரலி) அவர்களும் முஹர்ரம் மாதமும்

இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் துயர் நிறைந்த சம்பவத்தை நினைவுகூரும் மாதம் முஹர்ரம் ஆகும். இந்த வரலாற்று நிகழ்வின் ஞாபகார்த்தமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகள், தீய கொடுங்கோலர்களுக்கு எதிராக உறுதியுடன் நிற்க எம்மைத் தூண்டுகின்றன. யஸித் போன்ற சக்தியை நாங்கள் இமாம் ஹுசைனின் மனவலிமையைக் கொண்டு எதிர்த்து நிற்கிறோம். அசத்தியத்தை எதிர்க்கும் போராட்டத்தில் நாம் உறுதியாக உள்ளோம். இறைவனின் கருணை மீது எமக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது.

முஹர்ரம் மாதமும், கர்பலா காவியத்தின் நினைவுகளும் தொடர்ந்து நம் வாழ்வில் ஆழமான செல்வாக்கை செலுத்துகின்றன. செங்குருதி கூர்மையான வாள்களை வென்ற நாள் அது. ஒவ்வொரு ஆண்டும் மனித மனசாட்சியைத் உசுப்பும் மாதமிது. மார்க்கத்துக்காகவும் சமுதாயத்திற்காகவும் செய்ய வேண்டிய தனது கடமைகளை மனிதகுலத்திற்கு உணர்த்தும் மாதம் இது.

மனித வாழ்க்கையை நிர்வகிக்கும் சமூக, கலாசார, அரசியல் மற்றும் பிற பிரச்சினைகளை கொடுங்கோலர்களின் கைகளில் விட்டுவிட்டு, வெளிப்புற வழிபாட்டு முறைகளில் மட்டும் ஈடுபடுவது பொருத்தமற்றது. இறை சட்டத்தை புறக்கணித்து, தவறான, மன இச்சையின் அடிப்படையில் இயங்குவது தம்மைத் தாமே ஏமாற்றுவதாகும். இதன் மூலம் மக்களின் தலைவிதி சமூக அநீதிக்குள் வீழ அனுமதிக்கிறது.

இது வாழ்க்கைக்கு புத்தூக்கமளிக்கும் மாதமாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், முஹர்ரம் முதல் நாள் கொண்டாடி களிக்கும் ஒரு நாள் அல்ல. துரதிர்ஷ்டவசமாக சில அரபு நாடுகளில் இது கொண்டாட்ட தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. முஹம்மத் (ஸல்) அவர்களது பேரனான இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் மாபெரும் தியாகத்தை இவர்கள் மறந்துவிட்டதாகத் தோன்றுகிறது. யெமனில் சக அப்பாவி முஸ்லிம்களின் இரத்தத்தை இந்நாடுகள் தொடர்ந்து கொட்டுகிறது.

முஹர்ரம் என்பது முஸ்லிம்களின் பிரதிபலிப்புக்கான நேரம். இமாம் ஹுசைன் (ரலி) மற்றும் கர்பலாவின் தியாகிகள் ஞாபகார்த்தமாக அனுஷ்டிக்கப்படும் துக்க நிகழ்வுகள் சத்தியத்தைப் பற்றி சிந்திக்க சிறந்த சந்தர்ப்பமாகும்.

முஹர்ரம் முதலாம் தினத்தில் பாரசீக வளைகுடா அரபு நாடுகளிலும் எகிப்திலும் நடைமுறையில் இருந்து வரும் களியாட்டம், நடனம் மற்றும் மது அருந்துதல் போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபடுவதற்கு இஸ்லாம் முஸ்லிம்களை ஒருபோதும் அனுமதிக்கவில்லை. அதேபோன்று சக முஸ்லிம்களின் இரத்தம் சிந்துவதற்கு இஸ்லாம் முஸ்லிம்களை ஒருபோதும் அனுமதிக்கவில்லை, நிச்சயமாக ஈனச் செயல்கள் கருணைமிக்க தூதரால் நமக்குக் கற்பிக்கப்பட்டவை அல்ல.

முஹர்ரம் தொடங்கியவுடன் ஒடுக்கப்பட்ட பஹ்ரைனியர்கள் அல்லது ஒடுக்கப்பட்ட நைஜீரியர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள விசுவாசிகளின் இதயங்கள் கர்பலாவை நோக்கி திரும்பும்போது, அங்கு தியாகிகளுடனான சந்திப்பு இடம்பெறுகையில், உமையாக்களின் மறைக்கப்பட்ட நயவஞ்சகத்தனம் வெளிப்படுகிறது இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் குருதி புதுப்பிக்கப்படுகிறது.

முஹர்ரம் என்பது பயங்கரவாதத்தின் வேர்களை அம்பலப்படுத்த மனித மனசாட்சியைத் தூண்டும் மாதமாகும். இப்போது சில ஆட்சியாளர்கள் இத்தினத்தில் இஸ்லாத்தின் மனிதாபிமான பிம்பத்தை கெடுக்க முயற்சிக்கின்றனர். தங்களை முஸ்லிம்கள் என்று அழைத்துக் கொள்ளும் சில குழுக்களின் மிருகத்தனமான செயற்பாடுகளுக்கும் இஸ்லாத்தின் உயர் சட்டங்களுடன் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இப்பயங்கரவாதிகள் சியோனிச ஆதரவு கொண்ட மேற்கத்திய ஊடகங்களால் 'ஜிஹாதிகள்' என்றும் 'தூய்மையான முஸ்லிம்கள்' என்றும் அழைக்கப்படுவது நகைப்புக்குரியது.

ஒவ்வொரு யுகத்திலும் மனிதகுலம் ஒரு தகுதியான மாதிரியைக் கொண்டிருக்க முடியும் என்பதை முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பேரன் உலகுக்கு உணர்த்தினார்கள். தீய சக்திகளுக்கு எதிராக ஒரு முன்மாதிரி எக்காலத்திலும் இருக்கும் என்பதை உணர்த்தினார்கள். இதுவே இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் செய்தியாகும்.

ஈராக்கின் கர்பலா சமவெளியில் ஹிஜ்ரி 61 (கி.பி 680) இல் ஆஷுராவின் துயர்நிறைந்த சம்பவங்கள் அல்லது முஹர்ரம் 10 வது நாளின் துன்பகரமான சம்பவங்களை இம்மாதம் நினைவூட்டுகிறது. இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் உமையா ஆட்சியினால் விசுவாசப்பிரமானம் செய்ய சட்டவிரோதமாக நிர்பந்திக்கப்படுகையில், யஸீதுக்கு விசுவாசப்பிரமானம் செய்வதை விட போரிட்டு மடிவதை உயர்வாகக் கருதினார்கள்.

இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் வாழ்க்கை மற்றும் போதனைகளைப் பற்றி நாம் அனைவரும் ஆழமாக சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம். அவர் நீதிக்கான இயக்கத்தின் முன்னோடி, நல்லவற்றை ஏவும் மற்றும் தீயவற்றை விலக்கும் இயக்கங்களுக்கான முன்னோடி. எல்லாம்வல்ல அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்களின் பேரனால் தொடங்கப்பட்ட இவ்வியக்கம் 1380 ஆண்டுகளுக்கு மேலாக, இன்னும் பலத்திலிருந்து வலிமைக்குச் செல்லும் ஒரு பேரியக்கமாக உள்ளது.

இந்த மகத்தான பொறுப்பை ஈரான் இஸ்லாமிய குடியரசு இப்போது ஏந்திச் செல்கின்றது. அதற்கு எதிரான சூழ்ச்சித் திட்டங்களை வகுக்கும் கொடுங்கோலர்களை ஈரான் நிச்சயமாக வெற்றிகொள்ளும்.

Tue, 09/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை