தலைவர் பதவியிலிருந்து விலகத் தயார் ​​ஹொங்கொங்கின் தலைவி லெம் அறிவிப்பு

ஹொகொங்கை சூழ்ந்திருக்கும் பிரச்சினைகளை தான் மன்னிக்க முடியாத அளவுக்கு சிக்கல்களுக்குட்படுத்தி விட்டதாகவும், வாய்ப்புக் கிட்டினால் பதவிவிலகத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார் ஹொங்கொங் சிறப்பு நிர்வாகப் பிராந்தியத்தின் சர்ச்சைக்குரிய தலைவி ​ெகரி லெம்.

கடந்த வாரம் மூடிய அறையொன்றினுள் வர்த்தக சமூகத்தவர்களைச சந்தித்த கெரி லெம், ஹொங்கொங்கில் ஏற்ப்டடுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான இடம் மிகக் குறுகலானதாக உள்ளதாகக் கூறினார். அமெரிக்காவுடனான உறவு மேலும் சிக்கலடைந்து செல்கின்ற நிலையில் அங்கு ஏற்பட்டுள்ள பதற்ற நிலை சீனாவின் தேசிய பாதுகாப்புக்கும், இறைமைக்கும் அச்சுறுத்தலாக மாறிவிட்டதையும், அவர் இந்தச் சந்திப்புகளில் சுட்டிக்காட்டினார்.

ஆனால் நேற்று செவ்வாய்கிழமையன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாடொன்றில், பதிவி விலகும் எண்ணமேதும் தனக்கு இல்லையென லெம் தொரிவித்துள்ளார். மூடிய அறையொன்றில் தான் தெரிவித்த கருத்துக்கள் எவ்வாறு வெளியே கசிந்ததென்றும் லெம் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

ராஜினாமா செய்வதில்லை என்பது தனது சொந்தத் தெரிவு என்றும், தனிப்பட்ட ரீதியாக ஒரு கூட்டத்தில் தான் தெரிவத்த கருத்துக்கள் செல்லுபடியற்றவை என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

சீனாவால் தற்போது ஹொங்கொங் மிகப்பெரும் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஹொங்கொங்கில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை 1989 இல் சீனாவின் தினமன் சதுக்கப் போராட்டத்தைப் போன்தொரு நிலையை ஏற்படுத்துமென அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

ஹொங்கொங்கில் குற்றச்செயல்கள் புரிந்தவர்களுக்கு எதிரான விசாரணைகளுக்காக சந்தேக நபர்கள், சீனாவுக்கு நாடுகடத்தப்படுவதை அனுமதிக்கும் சட்டத்தை லெம்மின் அரசு முன்மொழிந்ததையடுத்து ஹொங்கொங்கில் கடந்த ஜுன் மாதம் முதல் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

ஆர்ப்பாட்டங்கள் காரணமாக சட்டம் இடைநிறுத்தப்பட்டாலும், லெம்முக்கு எதிரான மக்களின் ஆர்ப்பாட்டங்கள் தணிந்தபாடில்லை

இந்தச் சட்டத்தை முழுமையாக வாபஸ்பெறுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி வருகின்றனர். இதனை லெம்பின் அரசு மறுத்து வருகின்றது. ஹொங்கொங்கின் ஆர்ப்பாட்டங்களும் தியனமன் சதுக்க ஆர்ப்பாட்டங்கள் போல மாறிவிடுமோ என்று உலக நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.

Wed, 09/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை