தில்ருக்‌ஷி தொடர்பில் உடன் விசாரணை நடத்த வேண்டும்

நீதி அமைச்சின் செயலாளர் சட்ட மாஅதிபரிடம் வேண்டுகோள்

தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவின் கருத்து தொடர்பாக சரியான முறையில் விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு நீதியமைச்சின் செயலாளரினால் சட்ட மா அதிபரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தலதா அதுகோரள கூறியுள்ளார். 5000 இலட்சம் ரூபா செலவில் மூன்று மாடி கட்டடங்களை கொண்டு அமைக்கப்படவுள்ள பூகொட நவீன நீதிமன்ற தொகுதிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (22) நடைபெற்றது. இதன்போது ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எமது அமைச்சின் கீழ் அவர் சம்பந்தப்பட்ட திணைக்களம் அமைந்திருந்தாலும் அவர் அரச சேவை ஆணைக்குழுவின் கீழுள்ள அதிகாரி. அவ்விடயம் தொடர்பாக எமது அமைச்சின் செயலாளர் சரியான விசாரணையை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்ட மாஅதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனை சட்ட மா அதிபரும் அரச சேவைகள் ஆணைக்குழுவுமே மேற்கொள்ள வேண்டும். அவரின் தொலைபேசி உரையாடலில்

அரசின் அமைச்சரொருவர் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகின்றதே என்ற கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், அவர் அமைச்சர் ஒருவரின் தலையீட்டால் தான் இந்த விடயம் நிகழ்ந்ததென்று கூறியிருந்தால் அவர் யாரென்பதை கட்டாயமாக கூறவேண்டும். நானும் கூறுகின்றேன். அமைச்சரின் பெயரை குறிப்பிடுங்கள். ஏனென்றால் நாம் இதற்காக எந்த உதவியும் செய்யமாட்டோம். நாம் அவ் அதிகாரியிடம் அவ்வாறான விடயத்தை எதிர்பார்க்கவும் மாட்டோம். நிச்சயமாக அவ்வாறான தொடர்புகளினால் இது நடந்திருக்குமானால் அமைச்சர் யார் என்பதை வெளிப்படுத்துவது அவரின் பொறுப்பாகும். ஆனால் அமைச்சரொருவர் தொடர்புபட்டிருந்தாலோ இல்லையோ இவ்வாறான பொறுப்பு வாய்ந்த பதவியை வகிக்கும் அதிகாரியொருவர் இவ்வாறு செய்யமுடியாதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Mon, 09/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை