கடல் பாதுகாப்புப் பிரிவின் தலைவர் விஸ்வஜித் நந்தன விமான நிலையத்தில் கைது

எவன் கார்ட்

எவன் கார்ட் கடல் பாதுகாப்பு பிரிவின் தலைவர் விஸ்வஜித் நந்தன தியபாலனகே சி.ஐ.டியினரால் கைதுசெய்யப்பட்டார்.  

ராஜகிரிய கலபளுவாவ பிரதேசத்தைச் சேர்ந்த அவர் நேற்று அதிகாலை 12.15மணியளவில் எஸ்.கியூ 468சிங்கப்பூர் விமானம் மூலம் சிங்கப்பூரிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தபோதே சி.ஐ.டியினர் அவரை கைது செய்தனர்.  

816தன்னியக்க ஆயுதங்கள் மற்றும் 2இலட்சத்துக்கும் அதிகமான தோட்டாக்களை எம்.வி எவன் கார்ட் எனும் வர்த்தக கப்பலில் சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டின்பேரிலேயே அவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.  

பண்டாரநாயக்க விமான நிலையத்திலுள்ள சி.ஐ.டியினர் அவரைக் கைதுசெய்து மேலதிக விசாரணைகளுக்காக சி.ஐ.டி தலைமையகத்தில் ஒப்படைத்துள்ளனர். 

நீதிமன்றத்தால் பயணத்தடை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிங்கப்பூர் சென்றிருந்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.    எவன் கார்ட் சம்பவம் தொடர்பில் இதுவரை எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுள் நால்வர் விளக்கமறியலில் உள்ள நிலையில் மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.  

 

Sat, 09/28/2019 - 09:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை