டெங்கில்லா பாடசாலையை தெரிவு செய்யும் போட்டிகள்

கிண்ணியா சுகாதார வைத்திய அலுவலகத்தின் அனுசரணையுடன் கிண்ணியா வலயத்திலுள்ள பாடசாலைகளிடையே டெங்கில்லா பாடசாலைகளைத் தெரிவதற்கான போட்டி நடத்தப்பட்டன. இப்போட்டிகள் நேற்று முன்தினமும் (17), நேற்றும் (18) நடத்தப்பட்டது.

இந் நிகழ்விற்கு நடுவர்களாக சுகாதார வைத்திய அதிகாரி எம்.எஸ்.நசூர்தீன், நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.லாபிர் , ஆசிரிய ஆலோசகர் எம்.எம்.இபாத்தூல்லாஹ்,டெங்கு மற்றும் மலேசியா வெளிக்கள உத்தியோகததர் ஏ.கே.தாரிக் ஆகியோர் கலந்து கொண்டனர். டெங்கற்ற பாடசாலையைத் தெரிதல், திண்மக் கழிவுகளைக் கொண்டதான ஆக்கத் திறன் போட்டி, மாணவர்களுக்கான 30 செக்கன் கொண்ட வீடியோ போட்டி என மூன்று வகைகளில் இப்போட்டிகள் நடத்தப்பட்டன. இம் மூன்று போட்டிகளில் கலந்து கொண்டோருக்கு கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலவலகத்தில் பெறுமதியான பரிசில்கள் வழங்கப்பட்டன.

திருமலை மாவட்ட விசேட நிருபர்

Thu, 09/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை