அவுஸ்திரேலிய காட்டுத் தீயினால் நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்

அவுஸ்திரேலியாவின் கிழக்கு மாகாணங்களான குவின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்சில் பல இடங்களில் காட்டுத் தீ பரவி வருவதால் நூற்றுக்கணக்கான மக்கள் இருப்பிடத்தைவிட்டு வெளியேறி வருகின்றனர்.

அங்கு அதிவேகமாக வீசும் காற்றால் 140 இடங்களில் கட்டுக்கடங்காமல் காட்டுத்தீ பற்றி எரிகிறது. வடகிழக்கு மாநிலமான குவின்ஸ்லாந்தில் குறைந்த ஈரப்பதம், அதிக காற்று, காய்ந்த தாவரங்கள் உள்ளிட்ட காரணங்களால் 85 இடங்களில் தீப்பற்றியுள்ளது என்றும் 84 வீடுகள் காட்டுத்தீயால் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சந்தேகத்துக்குரிய வகையில் 8 இடங்களில் தீ பற்றியுள்ளதாக தெரிவித்துள்ள குவின்ஸ்லாந்து பொலிஸ் ஆணையாளர் கத்ரீனா கரோல், இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் 400க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் காட்டுத்தீயால் உயிரிழப்போ காயமோ எதுவும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Wed, 09/11/2019 - 06:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை