டெங்கு பரவும் சுற்றுச்சூழல்

348 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை கடிதம்

எஹலியகொடை சுகாதார பிரிவில் டெங்கு பெருகும் சுற்றுச்சூழலை வைத்திருந்த 348 பேருக்கு சிவப்பு நோட்டீஸ் எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகளுக்கிணங்க 70 நிரந்தர டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மேலும் டெங்கு நுளம்புகள் பெருகும் சூழலை வைத்திருந்த உரி மையாளர்கள் 243 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அத்துடன் மேற்படி குற்றச்சாட்டுக்குட்பட்ட மேலும் 348 பேருக்கு (சிவப்பு நோட்டீஸ்) எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் டெங்கு நுளம்புகள் தடுப்புப் பிரிவின் மூலம் பலாங்கொடை நகர பாடசாலைகளுக்கு வழங்கியுள்ள ஆலோசனைகளை பாடசாலைகளில் உரியமுறையில் நடைமுறைப்படுத்தாமையினால் பாடசாலை வளவினில் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பலாங்கொடை சுகாதார வைத்திய அதிகாரி நூர்தீன் ரபாய்தீன் தெரிவித்தார்.

இதன் காரணமாக பலாங்கொடை நகரசபை எல்லை பகுதியில் உள்ள பாடசாலை சூழல்களில் டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் அதிகம் உள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

பலாங்கொடை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய குழுவினர் சகல பாடசாலைகளிலும் பரிசோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இது சம்பந்தமாக ஏற்பட்டுள்ள அபாயகரமான நிலைமையினை கருத்திற்கொண்டு பாடசாலை அதிபர்களுக்கும் பலாங்கொடை கல்வி வலய பணிப்பாளருக்கும் எழுத்து மூலம் அறிவுறுத்தல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பலாங்கொடை சுகாதார வைத்திய அதிகாரி நூர்தீன் ரபாய்தீன் தெரிவித்தார்.

இந்த அறிவுறுத்தல்களை கவனத்தில் எடுக்காமல் உதாசீனம் செய்யும் பாடசாலைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)

Wed, 09/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை