அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை சம்பியன்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் கனடாவின் இளம் வீராங்கனை பியான்கா, முன்னணி வீராங்கனை செரீனாவை வீழ்த்தி பட்டம் வென்றார்.

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரிக்க ஒபன் டென்னிஸ் தொடர் நியூயோர்க்கில் நடைபெற்றது.

இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸுடன் கனடாவின் இளம் வீராங்கனை பியான்கா ஆன்ட்ரிஸ்கு மோதினார்.

சுமார் 1 மணி நேரம் 41 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பியான்கா 6–3, 7–5 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் பட்டம் வென்றார்.

கனடாவைச் சேர்ந்த ஒருவர் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

அறிமுக போட்டியிலேயே கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சோபித்த 19 வயது நிரம்பிய கனடா வீராங்கனை பியான்காவுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Mon, 09/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை