நொறுக்குத்தீனி சாப்பிட்டதால் பார்வை இழந்த இளைஞன்

இங்கிலாந்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக நொறுக்குத் தீனி மட்டும் சாப்பிட்டு வந்த இளைஞர் கண்பார்வையை இழந்தார்.

பழங்கள், காய்கறிகள் ஏதும் சேர்த்துக்கொள்ளாமல், பிரெஞ்ச் பிரைஸ், உருளைக் கிழங்கு வறுவல், ரொட்டி, மாமிச வகைகள் போன்றவற்றை மட்டும் இளைஞர் சாப்பிட்டு வந்தார்.

காலப்போக்கில் இளைஞரின் செவித் திறனும் பார்வையும் பாதிக்கப்பட்டன.

மருத்துவ சஞ்சிகை ஒன்று இதுபற்றிய விபரத்தை வெளியிட்டுள்ளது. 17 வயதில் கண் பார்வை மோசமடைந்திருந்த நிலையில் அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

பி12, வைட்டமின் டி உட்பட சில முக்கிய ஊட்டச்சத்துகள் இளைஞரின் உடலில் போதுமான அளவு இல்லை என்று மருத்துவப் பரிசோதனைகளில் தெரியவந்தது. கண் நரம்புகளைப் பாதிக்கும் நோயால் இளையர் பாதிக்கப்பட்டிருந்தார். அவருடைய கண்பார்வையை மேம்படுத்தும் சாத்தியம் அப்போது இல்லை. தற்போது அந்த இளைஞர் சிகிச்சை பெற்றுவருகிறார்.

Thu, 09/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை