வைக்கோலை சேதனப் பசளையாக இடுவது தொடர்பான விழிப்பூட்டல்

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பழுகாமம் விவசாய விரிவாக்கல் நிலையத்தின் ஏற்பாட்டில் "வயல் நிலங்களில் வைக்கோலை எரியூட்டுதலை தடுத்தலும் அவற்றை சேதனப் பசளையாக இடுதலும்" தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கு, பழுகாமம் விபுலானந்தா சிறுவர் இல்ல கேட்போர் கூடத்தில் கடந்த(12) இடம்பெற்றது.

மட்டு. தெற்கு வலய உதவி விவசாயப் பணிப்பாளர் ரீ.மேகராசா தலைமையிலான இந்நிகழ்வில், வைக்கோலினை எரிப்பதனால் ஏற்படும் பல்வேறு விதமான பாதிப்புகள், அவ் வைக்கோலினை மீளவும் வயல் நிலங்களில் பயன்படுத்துவதனால் கிடைக்கப்பெறுகின்ற நன்மைகள் என்பன செயன்முறை ரீதியாக தெளிவுபடுத்தப்பட்டது. இவ் விழிப்பூட்டலில் நூற்றுக்கு மேற்பட்ட கமநல அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து பயன்பெற்றுக் கொண்டனர்.

போரதீவுப்பற்று உதவி பிரதேச செயலாளர் சி.புவனேந்திரன், பழுகாமம் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.கலியுகராஜ் ஆகியோரும் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

மண்டூர் குறூப் நிருபர்

Mon, 09/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை