கொழும்பில் உலக மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி மாநாடு

2019 ஆம் ஆண்டிற்கான உலக புதுப்பிக்கத்தக்க மீள் சக்தி மாநாடு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (30) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஆரம்பமானது.

உலக  மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி மாநாடு "அபிவிருத்தியடைந்துவரும் நகரங்களுக்கு மீழ் புதுப்பிக்கத்தக்க சக்திகளின் மூலம்மின்சாரம், எரிசக்தி, நீர் வழங்கல் மற்றும் வசதியான வாழ்க்கைமுறை" என்ற கருப்பொருளில் ஐந்து நாட்கள் நடைபெறவுள்ளது.

பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக, அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க, உலக மீள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் அலி சயீக் மற்றும் உலக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கூட்டமைப்பின் இலங்கை உறுப்பினர் வித்யா அமரபால உட்பட பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.

Mon, 09/30/2019 - 16:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை