பாலமுனை விவசாயக் கல்லூரி டிப்ளோமா மாணவர்களுக்கு சான்றிதழ்

பாலமுனை விவசாயக் கல்லூரியில் விவசாயத் துறை டிப்ளோமா கற்கை நெறியினை பூர்த்தி செய்த ஒரு தொகுதி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின்போது விவசாயத் திணைக்களத்தின் விரிவாக்கல் மற்றும் பயிற்சிகளுக்குப் பொறுப்பான பணிப்பாளர் திருமதி கே.என்.எஸ்.ரணதுங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வின்போது கடந்த 2017/2018 ஆம் கல்வி ஆண்டில் ஒரு வருட விவசாயத் துறை கற்கை நெறியினைப் பூர்த்தி செய்த 24 மாணர்வகளுக்கு இதன்போது டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதேவேளை 'மகரந்தச் சேர்க்கைகளுக்கு தேனீக்களின் பங்களிப்பு' எனும் தொனிப் பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயச் செய்கைக் கண்காட்சியும் அறுவடை நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது. இதுதவிர, வருடாந்தம் வெளிட்டு வைக்கப்படும் 'பசுமைச்சிறகு' எனும் சஞ்சிகையின் மூன்றாவது மலரும் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டது.

இவ்விவசாயக் கல்லூரி வளாகத்தில் இயற்கை முறையில் செய்கை பண்ணப்பட்டிருந்த பெருந்தொகையான விவசாயச் செய்கையில் நஞ்சற்ற காய்கறி வகைகளும், பழ வகைகளும் இதன்போது அறுவடை செய்யப்பட்டமை விஷேட அம்சமாகும்.

இந்நிகழ்வுகளின்போது இக்கல்லூரின் வளர்ச்சிக்காக பங்காற்றியவர்களும், துறைசார் அதிகாரிகளும் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன், பல்வேறு கலை கலாசார பாரம்பரிய நிகழ்வுகளும் இதன்போது மேடையேற்றப்பட்டன.

இதன்போது அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சட்டத்தரணி ஏ.எம்.அப்துல் லத்தீப், அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் உள்ளிட்ட துறைசார் முக்கியஸ்தர்கள், திணைக்களத் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்

Mon, 09/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை