உலக தபால் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே கட்டுரை, சித்திரப் போட்டி

உலக தபால் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே நடைபெறும் கட்டுரை மற்றும் சித்திரப் போட்டிகளை இலங்கை தபால் திணைக்களம் நடத்தவுள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்த நிறுவனமான சர்வதேச அஞ்சல் சங்கம் மூலம் உலகம் பூராவும் பரந்துள்ள தமது உறுப்பு நாடுகள் 192பங்கு பற்றும் 2019ஆண்டின் ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி கொண்டாடப்படும் உலக அஞ்சல் தினத்துடன் இணைந்ததாக இலங்கை அஞ்சல் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்தப் போட்டியில் பாடசாலை  மாணவர்கள் பங்குபற்ற முடியும் என்பதுடன் பின்வரும் 03பிரிவுகளாக கட்டுரை மற்றும் சித்திரப் போட்டி நடைபெறும்.

கட்டுரைப் போட்டி 03மொழிகளிலும் நடைபெறும்.

கட்டுரைப் போட்டி :- 

பிரிவு,                தலைப்பு,       சொற்களின் எண்ணிக்கை 

கனிஷ்ட பிரிவு 6,7,8ஆந் தரம்

சிறுவர்களும் அஞ்சலும்

200 – 250க்கிடையில் 

இடைநிலை பிரிவு 9,10,11ஆந் தரம்

நான் காண விரும்பும் அஞ்சல்

300 – 350க்கிடையில் 

சிரேஷ்ட பிரிவு 12,13ஆந் தரம்

தற்போதைய அஞ்சலுக்குரித்தான சழூக செயற்பாடுகள்

500 – 600க்கிடையில்

 சித்திரப் போட்டி :- 

பிரிவுதலைப்பு 

கனிஷ்ட பிரிவு 6,7,8ஆந்தரம்

உலக தபால் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட உள்ள முத்திரையை உருவாக்குதல்  

இடைநிலை பிரிவு 9,10,11ஆந் தரம், 

சிரேஷ்ட பிரிவு 12,13ஆந்தரம்

முத்திரையை உருவாக்குதல் 

சகல ஆக்கங்களும் தபால் அதிபதி தபால் தலைமையகம், டீ.ஆர்.விஜேவர்த்தன மாவத்தை,கொழும்பு– 10 எனும் முகவரிக்கு 2019 செப்டெம்பர் மாதம் 20ஆந் திகதியோ அல்லது அதற்கு முன்போ கிடைக்கக் கூடியவாறு அனுப்ப வேண்டும்.

Sat, 09/07/2019 - 08:53


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை