மருத்துவர் வேலை நிறுத்தத்தால் தேசிய வைத்தியசாலையில் நோயாளர் அவதி

கொழும்பில்

அரச வைத்தியர்கள் சங்கம் நேற்று (18) திடீரென மேற்கொண்ட ஒரு நாள் வேலைநிறுத்தம் காரணமாக நாடளாவிய ரீதியில் நோயாளர்களும் பொது மக்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்தனர். நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக வந்தவர்கள் பலவேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இருந்தாலும் அங்கு ஒருசில வைத்தியர்கள் தமது சேவையை வழங்கியதாக சிகிச்சைக்கு வந்தவர்கள் தெரிவித்தனர்.

அதிகமானவர்கள் ஏமாற்றத்தில் சென்றதையும் காண முடிந்தது. குறிப்பாக தூர இடங்களில் இருந்து வந்தவர்கள் பெரிய சிரமத்திற்குள்ளானதாகவும் அவர்களை அடுத்த சிகிச்சை தினத்திற்கு வருமாறு அறிவித்ததாகவும் ஒருசிலர் தமக்கு மருந்து கிடைக்க வில்லை, வைத்தியர்கள் பரிசோதிக்கவில்லை என்றும் தெரிவித்தனர். அடிக்கடி இவ்வாறு வைத்தியர்கள் தமது சுயநல தேவைகளுக்காக திடீர் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் தமக்கு நேரம் மற்றும் பணச் செலவுகளை விட சிகிச்சைக்கு வந்து ஏமாந்து செல்வதால் பாரிய மன உளைச்சல்களுக்கு உள்ளாகி தமது நோயை மேலும் தீவிரமடையச் செய்வதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு அரசாங்கம் உரிய நடவடிக்ைக எடுத்து நோயாளர்களையும், மக்களையும் பாதுகாக்க வேண்டும் என நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏ.எஸ்.எம். ஜாவித்

Thu, 09/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை