வளவ சுப்பர் க்ரொஸ் மோட்டார் கார், மோட்டார் சைக்கிள் ஓட்ட பந்தய போட்டி எம்பிலிப்பிட்டியவில்

'வளவ க்ரோஸ்' மோட்டார் கார் ஓட்ட பந்தயப் போட்டி இவ்வருடமும் மிகச் சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடு கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.எம்பிலிப்பிட்டிய செவனகல 'ட்ராப்ட்ஸ்மன் ஒட்டோட்ரோம்' மோட்டார்கார் ஓட்டப் பந்தய திடலில் இப்போட்டிகள் நடை பெறவுள்ளன. இலங்கை இராணுவத்தின் மின்னியல் இயந்திரபொறியியல் பிரிவு இராணுவ வீரர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக இலங்கை இராணுவத்தின் மின்னியல் இயந்திர பொறியியல் பிரிவு மற்றும் இலங்கை மோட்டார் கார் ஓட்டப் போட்டி சங்கம் மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட் டிச் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து மேற்படி போட்டி தொடரை வருடாந்தம் இப்போட்டியை நடத்தி வருகிறது

1700 மீ்ற்றர் நீளமும் 30 மீற்றர் அகலமும் கொண்ட5 ஒடுங்கிய வளைவுகளைக் கொண்டதாக இந்த மோட்டார் கார் ஓ ட்டப்பந்தயத்திடல் அமைக்கப்பட்டுள் ளது 2011 ஆம் ஆண்டு முதல் ஆரம்பி க்கப்பட்ட மேற்படி போட்டிகள் இம்மு றை 9 வது வெற்றி வருடமாக நடத்த ப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக் கதாகும்.

மோட்டார் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் 13 வகை பிரிவுகளை கொண்ட போட்டி நிகழ்ச்சிகள் இம்முறை நடத்த ப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர் நாட்டுக்காக போராடி உயிர் நீத்த மற்றும் அங்கவீனர்கள் கு டும்பங்களை இழந்தவர்களுக்காக இ வற்றால் கிடைக்கும் இலாபம் பயன்ப டுத்தப்பட்டு வருவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்போட்டிக ளில் பங்குபற்றவுள்ள போட்டியாளர்கள் தமது பயிற்சி நடவடிக்கைகளை எதிர்வரும் 13,14,15 ஆம் திகதிகளில் இந்த ஓட்டப்பந்தயத்திடலில் மேற் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட் டுள்ளது.போட்டிகளில் வெற்றிபெறு பவர்களுக்கு பரிசில்கள் வழங்க 2.5 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டு ள்ளதாகவும் நுழைவுச் சீட்டுகளுக்கு லொத்தர் சீட்டிலுப்பின் மூலம் பரிசில்கள் வழங்கப்படவுள்ளதாகவும் ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)

Wed, 09/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை