விமர்சனங்களை எதிர்கொள்வதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்

இ.தொ. காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான்

என்மீது நம்பிக்கை வைத்து என்னை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச்செயலாளராக நியமித்தமைக்கு நன்றி. என்மீது நம்பிக்கை வைத்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸூக்கும் மலையக இளைஞர்களுக்கும் நான் சிறந்த சேவையை வழங்குவேன் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பிரதி பொதுச்செயலாளர் ஜீவன் குமாரவேல் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டமைக்கு பலர் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். நான் விமர்சனங்களை எதிர்கொள்வதற்கு தயாராகவே இருக்கின்றேன். யார் யாரை விமர்சித்தாலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதன் கொள்கையிலிருந்து பின்வாங்கபோவதில்லை. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர் குழு கூடியே ஏகமானதாக என்னை அதன் இளைஞர் அணியின் பொதுச்செயலாளராக நியமித்தனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸானது 80 வருட வரலாற்றை கொண்ட சக்திமிக்க அமைப்பாகும். இவ்வாறான ஓர் அமைப்பில் இளைஞர் அணி,மகளிர் அணி என்பன மிக முக்கிய பிரிவுகளாகும். அந்த வகையில் இ.தொ.கா வின் இளைஞர் அணி சிறப்பாக செயற்பட்டுவரும் ஓர் பிரிவாகும்.கடந்த காலங்களில் அரசியலினுள் உள்ளவாங்கப்படாது செயற்பட்ட ராஜமணி பிரசாந்த் இளைஞர் அணியியை சிறப்பாக வழிநடாத்தி வந்தார். ஆனால் அவர் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலிலே போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது கொட்டகலை பிரதேச சபையின் தலைவராக இருக்கின்றார்.

இது ஒரு தனி நபரின் அதிகாரத்தினால் வழங்கப்பட்ட நியமனம் அல்ல. கட்சியின் பிரதி பொதுச்செயலாளர் பதவியும் இளைஞர் அணி பொதுச்செயலாளர் பதவியும் என்னிடமே இருப்பதாகவும் பலர் என்னை விமர்சித்தார்கள்.

ஒரு பதவியிலிருந்து கொண்டு வேறு பதவியை வகிக்க இயலாது எனவே நான் அன்றே எனது கட்சி பிரதி பொதுச்செயலாளர் பதவியை இராஜினாமா செய்தேன் என்றார்.

 

தலவாக்கலை குறூப் நிருபர்

Tue, 09/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை