இந்தோனேசியாவில் பூகம்கம்: அறுவர் பலி; வீடுகள் சேதம்

இந்தோனேஷியாவின் மலுகு தீவுகளில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளார்.

நேற்றுக் காலை இடம்பெற்ற இந்த பூகம்பத்தால் சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. அம்பான் நகரின் வடகிழக்கு பகுதியில் சுமார் 29 கிலோமீற்றர் ஆழத்தில் ரிக்டர் அளவில் 6 புள்ளி 5 அலகாக இந்த அதிர்வு தோன்றியதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. திடீரென ஏற்பட்ட பூகம்பத்தால் மேட்டு பகுதி நோக்கி வீதியில் சென்ற இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் வாகனத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக பேரிடர் மீட்பு குழு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதேபோன்று பூகம்பத்தில் சிக்கி ஒருவர் மாயமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கட்டட இடிபாடுகளில் சிக்கி பலரும் காயமடைந்துள்ளனர். தற்போது வீடுகள் பல சேதமடைந்துள்ள நிலையில் மீண்டும் நில அதிர்வு ஏற்படலாம் என அச்சமடைந்துள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

Fri, 09/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை