விளையாட்டுத்துறை அமைச்சருடன் எந்தவித பிரச்சினையும் இல்லை

ஒலிம்பிக் சங்க செயலாளர்

விளையாட்டுத்துறை அமைச்சுடனோ விளையாட்டுதுறை அமைச்சருடனோ தனது குழுவுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் ஆனால் இரு தரப்பாருடனும் உள்ள தப்பபிப்பிராயத்தை நீக்குவதற்காக விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடலொன்றை கேட்டதாகவும், ஆனால் அதற்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என தேசிய ஒலிம்பிக குழுவின் செயலாளர் மெக்ஸ்வல் த சில்வா கூறினார்.

அவர் எதிர்வரும் சார்க் விளைட்டு விழாவில் இலங்கைக்கான தொடர்பாடல் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இதனால் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாதென கூறினார். நாட்டில் விளையாட்டுத்துறையை நடத்திச் செல்வது விளையாட்டு துறை அமைச்சின் வேலையே தவிர ஒலிம்பிக் குழுவின் பொறுப்பல்ல எனவும் கூறினார்.

விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் விடயத்தை தவறாகப்புரிந்து கொண்டு பேசியது பற்றி நாம் கவலையடைகின்றோம். ஆனால் தேசிய ஒலிம்பிக் குழு விளையாட்டுத்துறை அமைச்சுடன் நட்புறவுடனேயே நடவடிக்கையில் ஈடுபடும். இரு தரப்பாரும் இவ்வாறு செயல்பட முடியாது. நாட்டில் சட்டத்துக்கு எமது குழு அடங்கியதல்ல என்ற நிலையில் நாமில்லை. நாம் கூறுவதெல்லாம் சர்வதேச ஒலிம்பிக்கின் சட்டங்களுக்கு அமைய நாட்டின் சட்டத்துக்கும் உட்பட்டு செயல்படத்தயார் என்பதே.

அவர் மேலும் கூறியதாவது, விடயங்களை சரியாக அறியாது சிலர் ஒலிம்பிக் குழுவின் மீது குற்றம் சுமத்துகிறார்கள். எதிர்வரும் சார்க் விளையாட்டு விழா மற்றும் ஒலிம்பிக்குக்காக அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றை குழு செயற்படுத்தியுள்ளது.

டோக்கியோ (2020) ஒலிம்பிக் போட்டிகளுக்கான இலங்கை வீர, வீராங்கனைகள் 5 பேருக்கு வெளிநாட்டில் பயிற்சிபெற புலமைப்பரிசுகளை வழங்க குழு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

‘அதிகமாகக் கதைக்க வேண்டாம். விளையாட்டுத்துறை அமைச்சில் பணிபுரியும் பாரம்தூக்கும் போட்டி பயிற்சியாள் ஆர். பீ. விக்கிரமசிங்க மற்றும் அதன் பணிப்பாளர் ஐ. பீ. விஜேரத்னவுக்கு வெளிநாட்டில் பயிற்சிபெற ஒலிம்பிக்குழு வழங்கிய புலமைப்பரிசில் பற்றி இங்கு குறிப்பிட வேண்டும் எனக் கூறினார்.

திறமையான வீர, வீராங்கனைகளை அறிந்து கொள்ள ஒலிம்பிக்குழுவுக்கு உதவுவதற்கு ஒலிம்பிக் பதக்கம் பெற்ற சுசந்திகா ஜயசிங்க தேசிய ஒலிம்பிக் குழுவின் உயர் திறமை பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் சார்க் விளையாட்டு விழாவில் அகில இலங்கை அணியின் தலைமை பதவிக்கும் அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுசந்திகா ஜயசிங்க தனது பதவிக்கான கடிதத்தை அக்குழுவின் தலைவர் சுரேஷ் சுப்பிரமணியத்திடமிருந்து பெற்றுக்கொண்டார். அருகில் அதன் செயலாளர் மெக்ஸ்வல் த சில்வாவும் காணப்படுகிறார்.

Fri, 09/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை