வளவ்வ சுபர் குரொஸ்ஸில் சம்பியனான சியெட் கார் ஓட்ட அணி

மூன்றுவாரகாலப் பகுதிக்குள் சியெட் கார் ஓட்அணி குழு ரீதியானதனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துகொண்டது. இலங்கை இராணுவத்தின் மின்சார மற்றும் மோட்டார் பொறியியல் பிரிவால் கடந்த 22ல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வளவ்வ சுபர்குரொஸ் போட்டியிலேயே சியெட் அணி இந்த வெற்றியை ஈட்டி உள்ளது. 2019 பந்தய ஓட்ட பருவகாலத்தில் சியெட் அணி முழு உத்வேகத்தில் தொடருகின்றது.

இந்த அணியின் உஷார பெரேரா வளவ்வ சுபர் குரொஸ்ஸின் சம்பியன் சாரதியாகத் தெரிவுசெய்யப்பட்டார். அவரது சகாவான மாலிக்க குருவிட்ட ஆரச்சி கார் அணி சம்பியனாகத் தெரிவானார். உஷான் பெரேரா SLGT சுபர் கார் ரேஸ் 2 இலும் வெற்றிபெற்றார். அத்தோடு SLGT சுபர் கார் ரேஸ் வன்னில் மூன்றாம் இடத்தையும் பெற்றார். மாலிக்க குருவிட்ட ஆரச்சி சுபாருலெகாஸி போட்டியிலும் வெற்றியீட்டினார்.

சகலபோட்டிகளிலும் சியெட் அணி எட்டுமுடிவுப் புள்ளிகளைத் தொட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் ஜெக்ஸ் குணவர்தன எம்எச் 250 சிசி பிரிவில் ரேஸ் வன்னில் வெற்றிபெற்றார். ரேஸ் 2இல் இரண்டாம் இடத்தைப் பெற்றார். போர்ட் லாஸர் 1 300 சிசி பிரிவில் உபுல்வன் சேரசிங்க வெற்றியீட்டினார். போர்ட் லான்ஸர் 1500 சிசி பிரிவில் மூன்றாம் இடத்துக்குவந்தார். கேர்ணல் துமிந்த ஜயசிங்க எஸ் எல் எச் 1600 சிசி பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றார்.

செப்டம்பர் முற்பகுதியில் சியெட் அணி கஜபா சுபர் குரொஸ்ஸிலும் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தி இருந்தது. அநுராதபுரம் சாலியபுர போட்டிகளில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பிரிவுகளில் வெற்றிகளைத் தனதாக்கிக் கொண்டது.

Sat, 09/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை